? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  லூக்கா 4:22-30

வார்த்தை

ஜெப ஆலயத்திலிருந்த எல்லாரும், இவைகளைக் கேட்டபொழுது, கோபமூண்டு,.. லூக்கா 4:28

தேவனுடைய செய்தி:

தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்பட மாட்டான்.

தியானம்:

ஜெபஆலயத்திலிருந்த எல்லாருக்கும் முன்பாக இயேசு சத்தியமான வார்த்தைகளை கூறினார். எனினும், யூதர்கள் இவைகளைக் கேட்டபொழுது, இயேசுவின் மீது கோபமூண்டு, அவரை செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து தலைகீழாய்த் தள்ளிவிட முயற்சித்தார்கள்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

தேவனுடைய வார்த்தைகளை நாம் கிரகித்து அறிந்து கீழ்ப்படிய வேண்டும்.

பிரயோகப்படுத்தல் :

வசனம் 23ன்படி, இயேசுவினால் செய்யப்பட்ட கிரியைகள் எவை? ஏன் அதை தமது சொந்த ஊரில் இயேசு செய்யவில்லை?

‘ஜெபஆலயத்திலிருந்த எல்லாரும், கோபமூண்டு” (4:28) செய்ய முயற்சித்த காரியம் என்ன? இன்று இவ்வாறான மனப்பான்மை எமது சபையில் காணப்படுகின்றதா? எம்மிடம் காணப்படுகின்றதா? காணப்படுமானால் அவற்றைத் திருத்திக்கொள்ள நான் என்ன செய்யவேண்டும்?

தேவனுடைய தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படாமைக்கு காரணம் என்னவாக இருக்கும்?

எலியா, நாகமானைக் குறித்து இங்கு இயேசு கூறுவது என்ன? அவர்களை ஏன் அவர் உதாரணமாக எடுக்கின்றார்? அவர்களிடமிருந்து நான் கற்றுக் கொள்ளக்கூடிய விடயம் என்ன?

? இன்றைய எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin