? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 3:22 லூக்கா 2:13-18

ஞானஸ்நானம்

வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது. லூக்கா 3:221-23

தேவனுடைய செய்தி:

இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம் பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது, பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

தியானம்:

அக்காலத்தில், ஞானஸ்நானம் கொடுப்பதானது, புறஜாதியான எவராவது யெகோவா தேவனை ஆராதிக்க விரும்பி வருபவர்களுக்கே. இங்கே, யோவான் பாவத்திலிருந்து மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைக் கொடுக்கிறார்.  ஜனங்களும் ஞானஸ்நானம் பெற, இயேசுவின் ஞானஸ்நானம் பெறுகிறார்.

பிரயோகப்படுத்தல்:

இன்று சபையில், ‘ஞானஸ்நானம்” என்பதை எப்படிப் பார்க்கின்றனர்?

கலிலேயாவிலிருந்து யோர்தான்வரை தொலைதூரம் பயணம் செய்து, யோவானிடம் வந்து, ஞானஸ்நானம் தரும்படி கேட்கும் ஆண்டவராகிய இயேசுவின் செய்கையிலிருந்து நாம் எதைக் கற்றுக்கொள்ளலாம்?

மற்றைய 3 நற்செய்தி நூல்களிலும் இல்லாத ஒரு காரியத்தை, இயேசுவின் ஞானஸ்நானத்தின்போது லூக்கா கவனிக்கிறார். அவை என்ன?

-வசனம் 21ல், வானம்…..

-வசனம் 22ல், பரிசுத்த ஆவியானவர்….

-வசனம் 22ல், வானத்திலிருந்து ஒரு சத்தம்…

இன்று நான் ஞானஸ்நானம் பெறுவது அவசியமா?

? இன்றைய எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin