📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யாக்கோபு 1:13-20

உன்னை நீயே ஆராய்ந்து பார்!

சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக… யாக்கோபு 1:13

நாம் நினைக்கின்ற, செய்கின்ற ஒவ்வொன்றுக்கும் பிறரைக் குற்றப்படுத்தித் தப்பிக் கொள்வது நமது இயல்பான குணமாகிவிட்டது. அன்று ஏவாளும் ஆதாமும் செய்ததையே இன்று நாமும் செய்கிறோம். எந்தவொரு விடயத்திலும் முன்பின் யோசியாது, நம்மை பாதுகாப்பதற்காகச் சொல்லும் சாட்டுகளில் சில: “இது அவருடைய தவறு; ஒன்றும் செய்யஇயலாது; எல்லாரும்தான் செய்கிறார்கள்; ஏதோ தவறுதலாக நடந்துவிட்டது; யார்தான் சுத்தம்; நான் மனுஷன்தானே; இந்த ஒருமுறைதானே, சாத்தான்தான் தூண்டி விட்டான்; நான் கட்டாயப்படுத்தப்பட்டேன்; தவறு என்று நான் நினைக்கவில்லை; கடவுள் என்னைச் சோதித்துவிட்டார்; நான் நம்பின கடவுள் என்னைத் தடுத்திருக்க லாமே!” இவற்றில் ஒரு நினைவாவது நமக்குள் ஒருநாளும் எழவில்லை என்று நம்மால் சொல்லமுடியுமா?

ஒரு விடயத்தை நினைவில் கொண்டிருப்பது நல்லது. எப்போது நமது தவறுகளுக் கும் பாவங்களுக்கும் சாட்டுப்போக்குச் சொல்லுகிறோமோ, அப்போதே நமது குற்றங் களை பிறர்மீதோ, சூழ்நிலைகளின் மீதோ நகர்த்திவிட்டு, நம்மை நல்லவர்களாகக் காட்டி, தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறோம் என்பதுதான் உண்மை. இது ஓரு கிறிஸ்த வனுக்கு நல்லதல்ல. இது நமக்குத் தெரியாதது அல்ல. ஒருவிசை அமர்ந்திருந்து சிந்தித்தால், நடந்த தவறில் நமது பங்கு என்னவென்பது நமக்கு விளங்கும். நமது பொறுப்பை உணர்ந்து, அறிக்கையிட்டு, தேவமன்னிப்பைப் பெற்று அதைச் சரிப்படுத்தி னால், மற்ற எல்லாமே சரிப்பட்டுவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.

நாம் நினைப்பதற்கும் சிந்திப்பதற்கும் தேவன் நமக்குச் சுயாதீனம் தந்துள்ளார். அவற்றில் நாம் தவறிவிடாமல், கட்டுப்பாட்டுடன் வாழ பரிசுத்த ஆவியானவரையும் தந்தருளியிருக்கிறார். ஒரு உயரமான பனிமலையின் உச்சியிலிருந்து உருள ஆரம்பிக் கும் பனிக்கட்டி, கீழே வந்து விழும்போது ஒரு அழிவையே ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு பெரிதாகியிருக்கும். நமது தவறுகளை சிந்தனையிலேயே சரிப்படுத்தாவிட்டால், அது பெரிய சிதைவுகளை ஏற்படுத்தும். தேவன் நம்மைப் பொல்லாப்பினால் சோதிப்பவர் அல்ல. நாம் உறுதிப்படவும், தம்மை நெருங்கிச் சேரவும், சிலசமயம் பிசாசின் சோதனை களுக்கு இடமளிக்கக்கூடும். அந்தவேளையிலும், அவரை அண்டிநிற்கும் எந்தவொரு பிள்ளையையும் அவர் தனியே விட்டுவிலகுகிறவரும் அல்ல. எனவே, ஒவ்வொரு விநாடியும் நமது மனதில் தோன்றும் எண்ண அலைகளைக்குறித்து உணர்வுடன் வாழக் கற்றுக்கொள்வோமாக. நாம் தேவனுக்குள் நிலை கொண்டிருந்தால், பிசாசு கொண்டு வரும் எந்த ஒரு சோதனையிலும், நாம் தடுமாறவே மாட்டோம்.

💫 இன்றைய சிந்தனைக்கு:  

பிறரைக் குற்றப்படுத்தி என்னைத் தப்புவித்துக்கொண்ட சம்பவங்கள் இருந்தால், உண்மை உள்ளத்துடன் அவற்றை அறிக்கை செய்து, மனந்திரும்புவேனாக.

📘 அனுதினமும் தேவனுடன்.

Comments (40)

 1. Reply

  I have been looking for articles on these topics for a long time. casinocommunity I don’t know how grateful you are for posting on this topic. Thank you for the numerous articles on this site, I will subscribe to those links in my bookmarks and visit them often. Have a nice day

 2. Reply

  Hey! This is kind of off topic but I need some guidance from
  an established blog. Is it tough to set up your own blog?
  I’m not very techincal but I can figure things out
  pretty fast. I’m thinking about creating my own but I’m not sure where to start.

  Do you have any points or suggestions? Thank you

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *