📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 14:7-14

சுயமுக்கியத்துவம் வேண்டாம்

தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.லூக்கா 14:11

தேவனுடைய செய்தி:

கர்த்தர் நமது இருதயத்தைக் காண்கிறார்.

தியானம்:

உங்களைக் காட்டிலும் முக்கியமான மனிதர் முன்பாக, “உங்கள் இருக்கையை இவருக்குக் கொடுங்கள்” என்று உங்களைத் திருமணத்திற்கு அழைத்த நபர் கூறினால், அது உங்களுக்கு அவமானமாக இருக்கும். ஆகவே, மிக முக்கியமான இருக்கையில் அமராதீர்கள் என்று கூறிய இயேசுவானவர் முக்கியமற்ற இடத்தில் உட்காரும்படி அழைப்பு விடுக்கிறார். “நண்பனே, இன்னும் முக்கியமான இருக்கையில் வந்து அமருங்கள்” என அழைப்பு கிடைக்கும்போது மற்ற விருந்தினர்களும் உங்களை மதிப்பார்கள் என்றார்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

தாழ்மையுள்ளவனைக் கர்த்தர் நோக்கிப் பார்க்கிறார்.

பிரயோகப்படுத்தல் :

அநேகர் எல்லாவற்றிலும் தமக்கு முதலிடத்தை நாடுவதற்கான காரணம் என்ன? அதிலுள்ள தவறு என்ன? மதிப்புக்குரிய உயர்ந்த இடத்தினை அடைய நாட்டமில்லாத எவராவது உண்டா?

 “தன்னை முக்கியமாகக் கருதும் எந்த மனிதனும் தாழ்த்தப்படுவான்.” இதனைக் குறித்து உங்கள் கருத்து என்ன?

 “தன்னைத் தாழ்த்திக்கொள்கிற மனிதன் உயர்வாக வைக்கப்படுவான்” என்ற கூற்றிலுள்ள உண்மை எப்படிப்பட்டது?

“ஏழைகள் உங்களுக்கு மீண்டும் எதுவும் அளிக்க முடியாதபடி உபசரிப்பு செய்தால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்” இந்த ஆசீர்வாதத்தை நீங்கள் பெற்றதுண்டா?

“நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும்” இந்த நிச்சயத்தைப் பெற நான் செய்ய வேண்டியது என்ன?

💫 இன்றைய எனது சிந்தனை:

📘 அனுதினமும் தேவனுடன்.

173 thoughts on “12 மார்ச், 2022 சனி”
  1. Comprehensive side effect and adverse reaction information. Top 100 Searched Drugs.
    ivermectin 2%
    drug information and news for professionals and consumers. Some are medicines that help people when doctors prescribe.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin