? சத்தியவசனம் – இலங்கை. ??
? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 6:27-36
உங்கள் பகைவரை நேசியுங்கள்
உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள். லூக்கா 6:35
தேவனுடைய செய்தி:
பகைவர்களிடம் அன்பு காட்டுங்கள். அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
தியானம்:
இயேசுவின் போதனைகளைக் கேட்கிற மக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென இயேசு கூறுகின்றார். உங்களை மற்றவர்கள் பகைக்கலாம், வெறுக்கலாம், உங்கள் மீது தீயவற்றைக் கூறலாம், இழிவாக நடத்தலாம், கன்னத்தில் அடிக்கலாம், உங்கள் சட்டையை எடுத்துக்கொள்ளலாம். எனினும் நீங்கள் அவர்களை நேசிக்க வேண்டும்.
விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:
பாவிகளுக்கும், நன்றியற்ற மனிதர்களுக்கும் தேவன் நல்லவர். பரம பிதா அன்பும் இரக்கமும் உடையவராக இருக்கிறார்.
பிரயோகப்படுத்தல் :
கேட்கிற எவனுக்கும் கொடுப்பது எனக்கு கடினமான காரியமாக உள்ளதா?
திரும்பக் கிடைக்கும் என்கிற நம்பிக்கை சிறிதும் இல்லாவிடினும்கூட என்னால் கடன் கொடுக்க முடியுமா? கடன் கொடுப்பதைக் குறித்த எனது மனப்பான்மை என்ன?
இயேசு நம்மை, பகைவர்களிடம் அன்பு காட்டி, நன்மை செய்யும்படி கூறுவதேன்? நாம் யாருடைய பிள்ளைகள்? எமக்குரிய பலன் எப்படிப்பட்டது?
உங்களுக்குப் பிறர் எதைச் செய்ய விரும்புகிறீர்களோ அதையே பிறருக்கும் செய்யுங்கள் என்பதன் அர்த்தம் என்ன? மற்றவர்களின் நலனைக் குறித்து நாம் ஏன் சிந்திக்க வேண்டும்?
? இன்றைய எனது சிந்தனை:
? அனுதினமும் தேவனுடன்.
