? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 8:26-39

உன்னதமான தேவ குமாரன்

அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான். லூக்கா 8:39

தேவனுடைய செய்தி:

பாவத்திலிருப்பவர்களுக்கு தங்களது நிலைமை தெரியாது. தேவனோடு இருக்கும் நாம், தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருக்கவேண்டும்.

தியானம்:

“இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்” என்று மகா உரத்த குரலில் பிசாசு பீடித்திருந்த மனிதன் இயேசுவிடம் மன்றாடினான்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

“இயேசு தேவனுடைய குமாரன்” என்ற உண்மையை பிசாசுகள் அறிந்துள்ளன. அந்தப் பிசாசுகள் யாவும் இயேசுவைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றன.

பிரயோகப்படுத்தல் :

நெடுநாளாய் ஆடை அணியாமல், வீட்டில் தங்காமல், கல்லறைகளிலும் வீதிகளிலும் பிச்சைக்காரர்களைப்போல திரிபவர்களைக் குறித்து ஜெபித்தது மனமிரங்கியது உண்டா?

தீய ஆவி பீடித்திருக்கும் நபர்களை யாரால் விடுவிக்க முடியும்? அநேக அசுத்த ஆவிகள் ஒரு நபருக்குள் இருக்கமுடியுமா?

தங்களைப் பாதாளத்திலே போகக்கட்டளையிடாதபடிக்கு அசுத்த ஆவிகள் இயேசுவிடம் வேண்டிக்கொண்டதாயின், அந்த ஜெபத்தைக் கேட்ட இயேசுவின் வல்லமை எப்படிப்பட்டது? பன்றிகள் கூட்டத்திற்குள் நுழைய அனுமதிக்குமாறு அசுத்த ஆவிகள் மன்றாடியபோது, அவரும் அவற்றுக்கு அனுமதி கொடுத்தது ஏன்?

“நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளை யெல்லாம் அறிவி” என்ற இயேசுவின் வார்த்தைக்கு கீழ்ப்படிவது எப்படி?

? இன்றைய எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin