? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 5:33-39

உபவாசம் பற்றிய கேள்வி

மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் என்றார். லூக்கா 5:35

தேவனுடைய செய்தி:

தேவனுடனான உறவும் ஐக்கியமுமே முக்கியமானது.

தியானம்:

மற்றவர்களுடைய சீஷர்கள் அநேகந்தரம் உபவாசித்து ஜெபம்பண்ணுவதை கண்டவர்கள், சீஷர்கள் உபவாசமிருக்காமையைக் குறித்து இயேசுவிடம் முறையிட்டார்கள்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

ஏன் உபவாசித்து ஜெபிக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.

பிரயோகப்படுத்தல் :

யோவானின் சீஷர்கள் அடிக்கடி உபவாசிக்கவும், பிரார்த்திக்கவும் செய்தார்கள்.

பரிசேயர்களின் சீஷர்களும் அதே மாதிரி செய்தார்கள். இயேசுவின் சீஷர்கள் ஏன் உபவாசம் இருக்கவில்லை? உபவாசம் குறித்த இயேசுவின் மனப்பான்மை எப்படிப்பட்டது? இன்று எனது மனப்பான்மை என்ன?

மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர்கள் உபவாசிக்க வேண்டுமா? அந்த மணவாளன் யார்? அத்துடன், சீஷர்கள் எப்பொழுது எந்நாட்களிலே உபவாசிப்பார்கள் என இயேசு கூறுகின்றார்?

புதிய வஸ்திரத்திற்கும் பழைய வஸ்திரத்திற்குமிடையே உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன? ஏன் இயேசு இதை கூறுகிறார்?

புதுரச துருத்தியும், பழைய ரச துருத்தியும் இரண்டும் பத்திரப்பட்டிருக்க என்ன செய்ய வேண்டும்? இதன் அர்த்தம் என்ன?

புதியது பழையது இவ்விரண்டைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

? இன்றைய எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin