? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: லூக்கா 11:37-54

கொடுங்கள்.

உங்களுக்கு உண்டானவைகளில் பிச்சை கொடுங்கள், அப்பொழுது சகலமும் உங்களுக்குச் சுத்தமாயிருக்கும். லூக்கா 11:41

தேவனுடைய செய்தி:

வெளிப்புறத்தை உண்டாக்கினவர் உட்புறத்தையும் உண்டாக்கினார். ஆகவே வெளிப்புறமும் உட்புறமும் தேவனால் உண்டாக்கப்பட்டுள்ளது.

தியானம்:

அநேகர் வெளிப்புறமாக சுத்தமாக இருக்க முற்படுகின்றார்கள். அவர்களின் இருதயமாகிய உட்புறத்தையோ சுத்தமாக வைத்திருக்க முயற்சி செய்வதில்லை என்பதை இயேசு சுட்டிக்காட்டி நம்மை மனந்திரும்ப அழைக்கிறார்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

அறிவாகிய திறவுகோலை எடுத்துக் கொண்டவர்களாக நாமும் அதில் உட்பிரவேசிப்பதோடு மற்றவர்களையும் உட்பிரவேசிக்க செய்யவேண்டும்.

பிரயோகப்படுத்தல் :

வசனம் 38ன்படி, கை கழுவுதலைக்குறித்து உமது கருத்து என்ன?

வசனம் 42ன்படி, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிட்டதுண்டா? நீதி செய்வதை, அன்பு செலுத்துவதை அலட்சியம் செய்ததுண்டா? ஏன்?

முதன்மையான ஆசனங்களையும், வாழ்த்துதல்களையும் பெற விரும்பு வதைக்குறித்து தேவ வார்த்தை எச்சரிப்பது என்ன?

வசனம் 47ன்படி, தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறை கட்டுவது என்பது என்ன?

தேவ வசனத்திற்கு எதிர்த்து நிற்பதினால் நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம்? தேவன் எம்மிடத்தில் எவற்றைக் குறித்து கணக்கு கேட்பார்?

வருடத்தின் முதல் நாளில் நான் எதிலே மனந்திரும்ப வேண்டியவனாக இருக்கின்றேன்? அதை சிரத்துடன் கைக்கொண்டு, மனந்திரும்பியவிடயத்தில் உறுதியாக நிலை நிற்பேனா?

? இன்றைய சிந்தனைக்கு:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin