? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜாக்கள் 18:18-21

?  இரு சிந்தனைகள் நடுவில் தடுமாற்றம்

நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக் குந்தி நடப்பீர்கள்? கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள். 1இராஜாக்கள் 18:21

சில வருஷங்களுக்கு முன்னர், செய்தித்தாள் ஒன்றில் வெளியான செய்தி: ‘காலதாமதம் செய்கிற குழு” என்ற பெயரில், அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, அடுத்த தேர்தலில் கலந்துகொள்ள திட்டமிட்டிருப்பதாக ஒரு செய்தி வெளியானது. நாட்டிலுள்ள ஏனைய கட்சிகளையும்விட, இப்புதிய கட்சிதான் ஐக்கியம், ஒருமைப்பாடு இவற்றில் முன்னிலையில் நிற்கும் என்பது அந்த தலைவரின் கருத்து. இக்குழுவின் தலைவர், ஒரு சிறந்த பேச்சாளர். அவர் தமது தேர்தல் திட்டம்பற்றி கூறியதாவது, ‘வேட்பாளரைத் தெரிந்தெடுக்கும் பணி இரண்டாம் வார முடிவுக்குள் நிறைவுறாவிட்டால், தேர்தலைச் சில வாரங்கள் தள்ளிப்போடும்படி அதிகாரிகளிடம் கேட்போம். அப்போதுதான் எங்கள் கட்சி தேர்தலில் கலந்துகொள்ள முடியும்” என்பதாகும்.

எலியாவின் காலத்து மக்கள் காலம் தாழ்த்தும் தன்மை உடையவர்களாயிருந்தனர். தீர்க்கதரிசி எலியா அவர்களிடம் ஒரு முக்கியமான தீர்மானம் செய்யத் தூண்டினார். அவர்கள் கர்த்தரைத் தெய்வமாக ஏற்று வழிபடப்போகிறார்களா? அல்லது  பாகாலைத் தெய்வமாக ஏற்கப்போகிறார்களா? அவர்களை நிலைப்படுத்துவதற்காகவே அவர்களிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஒரு பதிலும் கூறாமல் அமைதியாக நின்றார்கள். யாருக்கும் எந்தத் தீமையும் நஷ்டமும் ஏற்படாதபடி சில காரியங்களை நாம் தள்ளிப்போடலாம். நம்முடைய பழச்செடியை இந்த வருடம் பயிரிட முடியவில்லையென்றால், அடுத்த வருடம் செய்துகொள்ளலாம். சுடச்சுட வெளிவரும் புதிய புத்தகங்களை இந்த வருடம் வாங்கிப்படிக்க முடியவில்லையானால், பின்னால் வாங்கிப் படித்துக்கொள்ளலாம். இப்படியே, நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையைக் குறித்தும் ஒருவரும் ஒன்றும் சொல்லவோ, செய்யவோ முடியாது. ஆனால், இது பழச்செடி அல்ல, தள்ளிப்போடுவதற்கு. நாம் செய்யத் தவறும் ஆவிக்குரிய தேர்வுகள் நித்தியகாலம் வரைக்கும் நம்மை வதைத்துக்கொண்டிருக்கும். இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நாம் நடக்காமல், கர்த்தரை மட்டுமே பின்பற்றுவோமாக.

வேதாகமத்தை வாசிக்கும் விஷயத்தில் காலதாமதம் செய்கிறீர்களா? ஜெபிக்க நேரம் செலவழிப்பதில் காலதாமதம் செய்கிறீர்களா? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வதில் காலதாமதம் செய்கிறீர்களா? அப்படியானால், இதையும் செய்யாமல், அதையும் செய்யாமல் தடுமாறி நிற்கும் நிலையை அகற்றுங்கள். ஆவிக்குரிய நல்ல தீர்மானங்களைச் செய்யுங்கள். அவை நித்திய காலத்துக்கும் உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை உண்டாக்கும் உங்களுக்காக இந்த நல்ல தீர்மானங்களை வேறு எவரும் செய்ய முடியாது.

? இன்றைய சிந்தனைக்கு:

எமது தீர்மானம் என்ன? யாரை நாம் சேவிப்போம்? வாழ்வில் எதற்கு நாம் முதலிடம் கொடுக்கப் போகின்றோம்?

? இன்றைய விண்ணப்பம்

புதிய வழிமுறையில் ஒத்துப்போய் வாழ்ந்திட கற்றிட வேண்டிய பிள்ளைகளுக்காக ஜெபிப்பதோடு, இந்தக் காலகட்டத்தில், அவர்களுக்கு வழிகாட்டும் பெற்றோர்களுக்காகவும் பாதுகாவலர்களுக்காகவும் ஜெபியுங்கள். ஒன்றாயிருக்கும் இந்நேரத்தில் பலனடையவும், பல புதிய விடயங்களையும் புதிய திறமைகளையும் கற்றுக்கொள்ளவும் கிடைத்த வாய்ப்பினை இந்த தனித்துவமான சூழ்நிலையிலே பயன்படுத்தும்படி மன்றாடுங்கள்.

⏩ இன்றைய தியானத்தை எழுதியவர் – டாக்டர் வுட்ரோ குரோல்

? அனுதினமும் தேவனுடன்.

(இன்றைய தியானத்தை நீங்கள் ww.fb.com/sathiyavasanam தளத்தில் வாசிக்கலாம். நன்றி.)

எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: www.Sathiyavasanam.lk | Backtothebible.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Solverwp- WordPress Theme and Plugin