? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜாக்கள் 17:17-24

? இடைவிடாத, ஊக்கமான ஜெபம்

கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார். 1இராஜாக்கள் 17:22

‘இன்று நமது திருச்சபைகளுக்குத் தேவையானது, அதிகமான இயந்திரங்கள் அல்ல, புதிய குழுக்கள் அல்ல, புதிய நவீன வழிமுறைகள் அல்ல: ஆனால், பரிசுத்த ஆவியினால் பயன்படுத்தப்படும் ஆட்கள், ஜெபவீரர்கள், வல்லமையாய் ஜெபிக்கக்கூடிய ஜெபவீரர்கள் இவர்கள்தான் தேவை” என்று பௌன்ட்ஸ் அவர்கள் எழுதியுள்ளார்.

எலியா என்ற தேவ மனிதனுக்கு நெருக்கடி ஏற்பட்டபோது, அவனுக்குத் தங்குவதற்கு வசதியும், உணவும் கொடுத்து ஆதரித்த பெண்மணியின் ஒரே மகன் இப்போது மரித்து விட்டான். உடனே எலியா, தனக்குத் தெரிந்த மிக வல்லமையான முறையைக் கையாள நினைத்தான். அதுதான் ஜெபம். திகைப்பின்றி அவன் மூன்றுதடவை அந்த சிறுவனின் உடலின்மீது படுத்தான். சிறுவனின் ஆத்துமாவை அவனது சரீரத்திற்குள்  அனுப்பும்படி ஆண்டவரிடம் ஊக்கமாக மன்றாடினான். ‘என் தேவனாகிய கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பி வரப்பண்ணும்” என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். சிறுவனை உயிர்ப்பித்து, அந்த ஆதரவற்ற விதவையை மகிழச் செய்யுமாறு வேண்டினான். எலியாவின் சத்தத்தை ஆண்டவர் கேட்டார். சிறுவனை உயிர்பெற்று எழச் செய்தார். எலியாவின் ஜெபம் தேவனுடைய அற்புதம் நிகழக் காரணமாயிற்று. பிற்காலத்தில் யாக்கோபு, ஊக்கமான ஜெபத்திற்கு ஒரு உதாரணமாக எலியாவின் ஜெபத்தை எடுத்துக் காட்டியதைக் காண்கிறோம் (யாக்கோபு 5:16,17).

கிறிஸ்தவர்கள் அனல் இல்லாமலும், விறுவிறுப்பு இல்லாமலும் அறை வெப்பநிலையில் ஜெபம் செய்கிறனர். அவர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஏறெடுக்கிறார்கள். ஆனால் அவற்றில் விறுவிறுப்பும் உயிரோட்டமும் இல்லாமல் இருக்கிறது. இதே ஆண்களும், பெண்களும், ஒரு விளையாட்டு மைதானத்தில் ஒரு அடுத்தவன் வெற்றிக்காக முழுப் பெலத்தோடும் உரத்த சத்தமாய் அலறுவார்கள், கூச்சலிடுவார்கள். என்ற போதிலும், தாங்கள் அரைமனதோடு ஏறெடுத்த ஜெபத்துக்கு முழு அளவில் ஆரவாரமான பதில் கிடைக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். இன்று உங்கள் இருதயத்தின் குமுறல்களை ஆண்டவர் முன் கொட்டிவிடும்படியாக ஒரு இடத்தையும் நேரத்தையும் ஒதுக்குங்கள். உங்கள் உணர்ச்சிகளைப் போலியாக்காதீர்கள். உங்கள் ஆவி விரும்பும் அவசியமான தேவைகளுக்காக ஊக்கமாக ஜெபியுங்கள். உங்களிடம் ஒன்றும் இல்லையானால் உங்களுக்கு வேண்டியதைத் தருமாறு ஆண்டவரிடம் வேண்டுங்கள். உங்கள் தேவைகளின் அவசரம், உங்கள் கரிசனையின் வேகம், இவை உங்கள் விண்ணப்பத்தில் பிரதிபலிக்கட்டும்.

? இன்றைய சிந்தனைக்கு :

முறையான ஊக்கமான ஜெபம் ஆசீர்வாதமான பலன்களை நிச்சயமாகத் தரும்.


? இன்றைய விண்ணப்பம்

எமது இஸ்லாமிய சகோதரர்களுக்காக ஜெபியுங்கள், அவர்கள் இந்த நோன்பு கால முடிவின் இறுதியில் கொண்டாடும் அதேநேரம், அண்டசராசரங்களை படைத்த இரக்கமுள்ள சர்வ வல்லமையுள்ள கர்த்தரை நெருக்கமாக அறிந்துகொள்ளவும், தனிப்பட்ட முறையில் அவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்க வேண்டுமெனவும் அவர்களுக்காக மன்றாடுங்கள்.

⏩ இன்றைய தியானத்தை எழுதியவர் – டாக்டர் வுட்ரோ குரோல்

? அனுதினமும் தேவனுடன்.

(இன்றைய தியானத்தை நீங்கள் http://sathiyavasanam.lk/dailyreading/ இணையத்தளத்தில் வாசிக்கலாம். நன்றி.)

?♂️ எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: www.Sathiyavasanam.lk | Backtothebible.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Solverwp- WordPress Theme and Plugin