? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எரேமியா 20:1-6

?  நீ யாருக்கு ஊழியம்பண்ணுவாய்?

நான் கூறின கர்த்தருடைய வார்த்தை நாள்தோறும் எனக்கு நிந்தையும், பரிகாசமுமாயிற்று. எரேமியா 20:8

வெளிச்சத்தின் பிள்ளையாகிய எரேமியா தீர்க்கதரிசி, யாருக்காக வாழ்ந்தார் என்பதைக் குறித்து இன்று சிந்திப்போம். நாம் தேவனை உயர்த்துகிறவர்களானால் நாம் நம்மைத் தாழ்த்துவோம். ஆனால் நாம் எம்மை உயர்த்துகிறவர்களானால், நம்மால் தேவனைத் தாழ்த்தமுடியாது, மாறாக தேவனுக்கு மாறாக நிற்கிறோம் என்பதுவே காரியம். ஆகவே நாம் யாருக்கு ஊழியம் செய்கிறோம் தேவனுக்கா? அல்லது எமக்கா? அல்லது பிற மனிதருக்கா? இதைச் சிந்திப்பது நல்லது.

எரேமியாவுக்கும் பஸ்கூருக்குமிடையே ஒரு போராட்டம். எரேமியாவை எதிர்த்த இந்த பஸ்கூர் கர்த்தருடைய ஆலய பிரதான விசாரணைக் கர்த்தாவாக இருந்தான். இவன் ஒரு ஆசாரியனாயிருந்தும், ஒரு தீர்க்கதரிசிபோல நடித்துக்கொண்டிருந்தான். யூதாவுக்கு விரோதமான கர்த்தருடைய வார்த்தையை ஒளிவுமறைவின்றி எரேமியா உரைத்தபோது, ஆசாரியனான பஸ்கூர் அதைக் காதில் வாங்கி, அதற்கேற்றபடி காரியங்களை முன்னெடுத்திருக்க வேண்டும். எனினும் பஸ்கூர் செய்தது என்ன? எரேமியாவைப் பிடித்து அடித்து, தண்டித்து, ஆலயத்தின் ஒருபுறத்திலுள்ள காவலறையிலே போட்டுவிட்டான்.

அவன் அப்படிச் செய்துவிட்டான் என்பதற்காகக் கர்த்தரின் வார்த்தை பொய்யாகுமா? அல்லது உண்மை அற்றுப்போகுமா? இந்த இடத்தில் எரேமியாவைக் கவனியுங்கள். மறுநாள் எரேமியா விடுவிக்கப்பட்டபோதும், மீண்டும் பயமின்றி, யூதாவுக்கு நடக்கப் போவதை மாத்திரமல்லாமல், பஸ்கூருக்கும் அவன் வீட்டாருக்கும் வரப்போகிற கடின நாட்களைக் குறித்தும் எரேமியா ஆணித்தரமாகச் சொன்னார்.

நம்மில் அநேகரும் பலதடவை இந்த பஸ்கூரைப்போல நடந்துகொள்வதுண்டு. உண்மை பலவேளையும் கசக்கும் அல்லது முள்ளைப்போல உறுத்தும். அதை ஏற்றுக்கொள்வது கடினமாயிருக்கும். ஆனால், அந்த உண்மைக்கு நாம் காட்டும் மாறுத்தரமே, நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டும். இந்த பஸ்கூர் ஆசாhpயனாயிருந்தும் அவனுக்கும் தேவனுக்குமிடையிலே நல்லுறவு இருக்கவில்லை. அதனால் அவனால் எரேமியாவின் தீர்க்கதரிசனத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. யூதா சிறைபிடிக்கப்படுவதை அவனால் கிரகிக்க முடியவில்லை. அதனால் எரேமியாவுக்கு விரோதமாக எழும்பினான். அவனிடத்தில் காணப்பட்ட தன்மை என்ன? அதுதான் இருளின் கிரியை. ஆனால் அதற்காக எரேமியா அமைதியாய் இருக்கவில்லை. அவர் தேவனுடைய தீர்க்கதரிசி. மனுஷரைப் பிரியப்படுத்தவோ அல்லது தன்னைப் பாதுகாக்கவோ முயலவில்லை.

இன்று பலவித தீர்க்கதரிசிகள் எழும்பியிருக்கிறார்கள். ஜாக்கிரதையாய் இருப்போம். எரேமியா போன்றவர்களையே கர்த்தர் தேடுகிறார்.

? இன்றைய சிந்தனைக்கு :

எழுதுவது, போதிப்பது, பிறருக்கு எடுத்துச் சொல்லுவது எல்லாம் வெகு இலகுவான காரியம். ஆனால் நான் அப்படிப்பட்ட ஒருவனாய் தேவனுக்கு என்னைத் தருவேனா?

? இன்றைய விண்ணப்பம்

எமது நிதித் தேவைகளை கர்த்தர் வழங்கும்படியாக மன்றாடுங்கள், மிகக் கடினமான இச் சூழ்நிலையின் மத்தியிலும் தொடர்ந்தும் கொடுப்பவர்களுக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம். எமது வினைத்திறன் பாதிக்கப்படாமல், எமது செலவீனங்களைக் குறைப்பதற்கான வழிமுறைகளை கண்டறியும்படி தேவ ஞானத்தினை கேட்டு எமக்காக மன்றாடுங்கள்.

⏩ இன்றைய தியானத்தை எழுதியவர் – இ. வஷ்னீ ஏனர்ஸ்ட். | 0094 771869710

? அனுதினமும் தேவனுடன்.

(இன்றைய தியானத்தை நீங்கள் https://www.facebook.com/sathiyavasanam/ முகப்புத்தகத்தில் வாசிக்கலாம். நன்றி.)

?‍♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: www.Sathiyavasanam.lk | Backtothebible.lk
Call: 011-4691500 | 011- 4691532

Solverwp- WordPress Theme and Plugin