? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 23:26-33

சிலுவையை நோக்கி

எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். லூக்கா 23:28

தேவனுடைய செய்தி:

ஒரு குற்றவாளியை இயேசுவின் வலது பக்கத்திலும், இன்னொரு குற்றவாளியை இயேசுவின் இடது பக்கத்திலும் சிலுவையில் அறைந்தார்கள்.

தியானம்:

இயேசுவின் சிலுவையைச் சுமந்து அவரைத் தொடர்ந்து வருமாறு சீமோனை போர் வீரர்கள் வற்புறுத்தினார்கள். கொல்லப்படுவதற்காக இரண்டு குற்றவாளிகளும் இயேசுவோடு சென்றார்கள். வழியில் பெண்கள் உட்பட பலர் இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள்.

பிரயோகப்படுத்தல் :

வசனம் 28ல், “நீங்கள் எனக்காக அழாமல்” என்று இயேசு ஏன் கூறுகிறார்? ஏன் “உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்” என்று எருசலேம் குமாரத்திகளைப் பார்த்து கூறுகின்றார்?

வசனம் 31ன்படி, “பச்சை மரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்ட மரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள்” என்பதன் அர்த்தம் என்ன?

வாழ்க்கை நன்றாக இருக்கும்போது மக்கள் இவ்வாறு நடந்துகொண்டால், தீமையான காலம் வரும்போது என்ன நிகழும்?

இயேசுவைச் சிலுவையில் போர்வீரர்கள் அறைந்தார்கள். இன்று தேவ பிள்ளைகளுக்கும் இவ்வித பாடுகள் ஏற்படுமா? அப்படி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? யாரால் இப்பாடுகள் ஏற்படுகின்றன?

எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin