? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 23:13-25

பிலாத்துவும் மக்களும்

மரணத்துக்கு ஏதுவானகுற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே. ஆகையால் நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான். லூக்கா 23:22

தேவனுடைய செய்தி:

துன்மார்க்கர் எவ்வளவு புகார் கூறினாலும், இயேசுவை குற்றவாளியாக்க  முடியாது. அவர் பாவமற்றவர்.

தியானம்: 

நகருக்குள் கலகம் விளைவித்ததற்காக ஏற்கெனவே சிறையில் அடைக்கப் பட்டிருந்த மனிதன் பரபாஸ். அவன் சிலரைக் கொன்றுமிருந்தான். அவனை விடுவிக்கும்படிக்கும், இயேசுவையோ சிலுவையில் அறைந்து கொல்லும் படிக்கும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மக்களோடுகூட அவர்மேல் பிடிவாதமாய்க் குற்றஞ்சாட்டி உரத்த சத்தமாய் கூக்குரலிட்டதால், இயேசுவை மக்களிடம் பிலாத்து ஒப்படைத்தான்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

தமது குற்றங்களை மறைப்பதற்காக, பிறர்மீது குற்றம் சாட்டுபவர்களைக் குறித்து உமது கருத்து என்ன?

பிரயோகப்படுத்தல் :

பிறரைக் குறித்த எமது சொற்கள், சிந்தனைகளைக் குறித்து நாம் கவனமாயிப்பது அவசியமானதா? அதில் கவனமாயிருப்பது எப்படி?

தமது குற்றங்களை மறைப்பதற்காக, பிறர்மீது குற்றம் சாட்டுபவர்களைக் குறித்து உமது கருத்து என்ன?

மக்கள் அனைவரும் பரபாஸ் விடுதலை செய்யப்பட உண்மையில் விரும்பினார்களா? குற்றவாளிகள் தப்பிக்கொள்வதைக் குறித்த உமது சிந்தனை என்ன?

இன்று எனது குற்றம் என்ன? நான் எந்த விதத்தில் மற்றவரைக் காயப்படுத்தியுள்ளேன்? என்னை விடுவிக்க இயேசு செய்தது என்ன?

எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin