[? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 2இராஜா 3:1-20

மனந்திரும்புவோம்!

பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது. சங்கீதம் 33:19

தேசத்தின் பொருளாதாரம் மோசமடைந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களுக் காக அலைந்து, வரிசைகளில் காத்துநின்ற சிலர் மரணமடைந்த சம்பவங்களும் நிகழ்ந்துவிட்டன. இந்த நிலையில் கிறிஸ்தவர்களாகிய நமது பொறுப்பு என்ன? நாம் கொடுக்கவேண்டிய பங்களிப்பு என்ன? பஞ்சமும், பட்டினிச் சாவும் வந்துவிடுமோ என்று புலம்புவதா? தேசத்தின் கஷ்டநிலையை அறிந்த கடவுள் பார்த்துக்கொள்வார் என்று நிர்விசாரமாக இருப்பதா? இரண்டும் தவறு. நமது தவறை உணர்ந்து, இந்த நாட்களில் நமது பணி என்னவென ;பதை சிந்தித்து அதை நடப்பிப்பதை விடுத்து, புலம்பிக்கொண்டிருப்பது தகாது. கர்த்தர் தமது பிள்ளைகளைப் பஞ்சகாலத்திலும் பசியின்றிப் பட்டினியின்றிப் போஷிக்கின்ற தேவன் என்ற சத்திய வார்த்தையிலே விசுவாசம் கொண்டவர்களாக, பிறரையும் பெலப்படுத்தவேண்டிய நாம் இந்நாட்களில் என்ன செய்துகொண்டிருக்கிறோம்?;

ஒருதடவை இஸ்ரவேலின் ராஜா யோராம், தனக்கு எதிராக எழும்பிய மோவாப் ராஜாவை எதிர்த்து யுத்தம்பண்ணுவதற்கு யூதா ராஜாவையும் ஏதோமின் ராஜாவையும் கூட்டிக்கொண்டு வனாந்தர வழியாய் சென்றான். அவர்கள் ஏழு நாட்களாக சுற்றித் திரிந்து வனாந்தரத்தில் தண்ணீர் இல்லாமல் களைத்துப்போய், எலிசாவை அணுகினார்கள். எலிசா தீர்க்கனோ, “இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள். நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும், …இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொன்னார் என்றார். அடுத்தநாளில் தண்ணீரினால் தேசம் நிரம்பியது. இங்கே எலிசா சொன்ன ஒரு வார்த்தை: “இது கர்த்தரின் பார்வைக்கு அற்பகாரியம்” என்பதாகும். தண்ணீர் இல்லாமலே வாய்க்கால்களை வெட்டிய அந்த விசுவாசம், பஞ்சத்தில் கர்த்தர் நடத்துவார் என்ற அந்த விசுவாசம் நமக்கும் தேவை. தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்துக்கு விலக்குகிறது மாத்திரமல்ல, பஞ்சத்திலும் அவர்களை உயிரோடே காக்கிறவர் நம் தேவன் (சங்கீதம் 33:18,19).

ஆனால், பிரச்சனை நம்மில்தான் இருக்கிறது. சூழ்நிலைகளால் விசுவாசம் தளர்ந்து போவது ஏன்? நாம் செய்யவேண்டிய காரியம் ஒன்றுதான்; அன்று எருசலேமின் அலங்கத்தைக் குறித்துக் கேள்வியுற்ற நெகேம-pயா செய்த முதல் காரியம், உட்கார்ந்து அழுது துக்கித்து உபவாசித்து மன்றாடி, “நானும் என் ஜனங்களும் பாவம் செய்தோம்” என்று அறிக்கையிட்டுக் கதறினார்! நாமோ, இன்றைய நிலைமையை மாற்றுவது கர்த்தருக்கு அற்ப காரியம் என்பதையும் மறந்து, பிறரைப் பலபபடுத்தி அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகள் செய ;வதையும் விடுத்து, நமது பாவநிலையை சிந்தித்து நம்மைத் தாழ்த்தி மனந்திரும்பாமல், வெறுமனே அழுது புலம்பி, பிறரை குறை சொல்லிக்கொண்டிருக்கிறோமா. இன்றே மனந்திரும்புவோமாக.

? இன்றைய சிந்தனைக்கு:  

கர்த்தரால் ஆகாத காரியம் எதுவாவது உண்டோ?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin