? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 23:34-43

சிலுவையில் இயேசு

ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் லூக்கா 23:42

தேவனுடைய செய்தி:

“பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” சிலுவையில் இயேசுவின் மன்னிப்பு ஜெபம்.

தியானம்:

கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் இயேசு சிலுவையில் அறையப்பட்டார். அவருடைய வஸ்திரங்களை போர்வீரர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். அவருக்குக் காடியைக் கொடுத்து பரியாசம்பண்ணினார்கள். சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவனும்கூட அவரை இகழ்ந்தான்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

நாம் நடப்பித்தவைகளுக்;குத்தக்க பலனை அடைகிறோம்.

பிரயோகப்படுத்தல் :

“நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள்” என்று அவரைப் பரியாசம்பண்ணியது ஏன்? அவனது மனப்பான்மை என்ன?

“ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” என அவரிடம் கெஞ்சியது ஏன்? அவனது மனப்பான்மை என்ன?

“நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்” என்ற உணர்வு உங்களுக்கு ஏற்படக்கூடிய சம்பவம் ஏதும் நடந்ததுண்டா? அது என்ன?

“இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்” என்று இயேசு கூறியது ஏன்? நான் மரித்தால் தேவனுடன் இருப்பேன் என்ற நிச்சயம் உங்களிடம் உண்டா?

இயேசுவைப்போல நான் எதிரிகளை மன்னிக்க ஆயத்தமா?

எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin