? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோவான் 1:1-13

மெய்யான ஒளி

…அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். யோவான் 1:12

தேவனுடைய செய்தி:

உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு!

தியானம்:

அன்றுபோல, இன்று வாழும் மக்கள் தீயவர்கள். அவர்கள் அடையாளத்தைத் தேடுகிறார்கள். சாலொமோனை விட, யோனாவை விட பெரியவர் இங்கே மானிட குமாரனாக வந்திருக்கிறார். அவரே நமது வாழ்விற்கு வெளிச்சம் தருபவர்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது. ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறதுபோல, உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்.

பிரயோகப்படுத்தல் :

வசனம் 31ன்படி, தென்தேசத்து ராஜஸ்திரீ எதை தேடி வந்தாள்? அவள் இறுதியில் கூறுவது என்னவாக இருக்கும்?

வசனம் 32ன்படி, நினிவே பட்டணத்தார் என்ன செய்தார்கள், அவர்கள் இறுதியில் கூறுவது என்னவாக இருக்கும்?

வசனம் 34ன்படி, கண்ணைக் குறித்து இயேசு கூறுகின்ற காரியம் என்ன?

என்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கிறேனா?

நான் எதை தேடுகின்றேன்? என் கண் வெளிச்சமாயிருக்க என்ன செய்ய வேண்டும்? அது இருளடைவதற்கான காரணம் என்னவாக உள்ளது?

இந்த கிறிஸ்மஸ் நாளிலே, கிறிஸ்தவர்கள் தேடுகின்ற அடையாளம்

என்னவாக இருக்கின்றது? மனுஷகுமாரனை தேடுகிறார்களா? அவர் யார்?

எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin