? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 23:44-48

இயேசுவின் மரணம்

உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார். இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.லூக்கா 23:46

தேவனுடைய செய்தி:

தேவன் தமது பிள்ளைகளை மறந்துவிடுபவரல்ல. 

தியானம்:

அப்போது மதிய வேளை. இருள் சூழ்ந்திருந்தது. தேவாலயத்தின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. பிதாவின் கரங்களில் இயேசு தமது ஜீவனை ஒப்புக்கொடுத்தார்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான். (வசனம் 47)

பிரயோகப்படுத்தல் :

எவ்வளவு நேரம் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிருந்தது?

வசனம் 48ன்படி, ஜனங்களெல்லாரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது என்ன செய்தார்கள்?

வசனம் 47ன்படி, நூற்றுக்கதிபதி சம்பவித்ததைக்கண்டு என்ன சொன்னான்?

சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது என்பதைக்குறித்து தேவ ஆவியானவர் நமக்குக் கற்பிக்கின்ற காரியம் என்ன?

மரணத்திற்குப் பிறகுள்ள வாழ்க்கைக்காக நான் என்ன செய்துள்ளேன்?

இயேசுவின் மரணத்திற்காக, நானும் தேவனை மகிமைப்படுத்துவேனா? அல்லது துக்கத்தோடு சென்றுவிடுவேனா?

எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin