குறிப்பு-

வாசகர்களாகிய உங்களுடைய தியானத்திற்கென்று பிரதி சனிக்கிழமையை நாம் தெரிந்துள்ளோம். உங்கள் தியானத்திற்கு உதவியாக 1சாமுவேல் 26 ஐ வாசித்துத் தியானித்து, உங்கள் சிந்தனைகளை குறித்துக் கொள்ளுங்கள். நீங்களும் தியானிப்பதற்கான முயற்சிகளில் பயிற்சியெடுங்கள். பயன்பெறுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். நன்றி. – தொகுப்பாசிரியர்.

? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1சாமுவேல்  26:1-4

?  சரியானதை அறிந்துகொள்!

தாவீது வேவுகாரரை அனுப்பி, சவுல் வந்தது நிச்சயம் என்று அறிந்துகொண்டான்.1சாமுவேல் 26:4

? தியான பின்னணி:

சில காலங்கள் தாவீதை தேடாமல் இருந்தார் சவுல். சீப் ஊரார் சவுலிடம் வந்து தாவீது ஒளிந்திருக்கும் இடத்தை அறிவித்தனர். உடனே சவுல், தாவீதைப் பிடிக்கவும், அழிக்கவும் தேடுதல் வேட்டையை ஆரம்பிக்கின்றான். சவுல் வருகிறதை தாவீதும் அவதானிக்கிறான். தேவன் தாவீதை அரசனாக தெரிந்தெடுத்திருந்தாலும், சாமுவேல் அவனை அபிஷேகம் பண்ணியிருந்தாலும், சிலருக்கு அதை ஏற்றுக்கொள்வது கடினமாக இருந்தது.

? பிரயோகப்படுத்தல் :

❓ பிழையான விதத்தில் ஒருவர் செயல்பட, சிந்திக்க வைக்க தூண்டிவிடும் நபர்களைக்குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

❓ உங்களைக் குறித்து ‘வேறொருவரிடம் தூண்டிவிட்டவர்களை எப்படிப் பார்ப்பீர்கள்?

❓ நீங்கள் யாரையாவது பிழையான விதத்தில் பார்க்க, சிந்திக்க, செயல்பட ‘பேசினது” உண்டா?

❓ ‘பிழை” என தெரிந்திருந்தும், மற்றவர்களது பாராட்டைப் பெறவும், மற்றவர்களின் பார்வையில் நேர்மையானவர்கள் எனக் காட்டவும் நடந்துகொள்வது ‘சிறுபிள்ளைத்தனமானது”, தாழ்வானது. அது தேவ பிள்ளைகளுக்குத் தகாது.

? தேவனுடைய செய்தி:

▪️ அழிக்க விரும்புகின்றவனிடமிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள நாம் விழித்திருப்பது மிகவும் அவசியம்.

? விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

தேவன் சொன்னதை செய்துமுடிப்பார். அவரை நம்பினோர் கைவிடப்பட மாட்டார்கள். 

? எனது சிந்தனை குறிப்பு :

__________________________________________________________________________________________________________________________________________________________________________

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Solverwp- WordPress Theme and Plugin