குறிப்பு-

வாசகர்களாகிய உங்களுடைய தியானத்திற்கென்று பிரதி சனிக்கிழமையை நாம் தெரிந்துள்ளோம். உங்கள் தியானத்திற்கு உதவியாக 1சாமுவேல் 25 ஐ வாசித்துத் தியானித்து, உங்கள் சிந்தனைகளை குறித்துக் கொள்ளுங்கள். நீங்களும் தியானிப்பதற்கான முயற்சிகளில் பயிற்சியெடுங்கள். பயன்பெறுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். நன்றி. – தொகுப்பாசிரியர்.

? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1சாமுவேல்  25:26-31

?  உன்னை நடத்தும் தேவன்!

…நீர் உயிரோடே இருக்கும் நாளில் ஒரு பொல்லாப்பும் உம்மிலே காணப்படாதிருப்பதாக. 1சாமுவேல் 25:28

? தியான பின்னணி:

நாபாலின் மனைவியாயிருந்த அபிகாயில் நாபாலின் பாவ குணத்திற்கு உடன்படவில்லை. அவள் சாந்தமான, மென்மையான வார்த்தைகளால் தாவீதிடம் பேசுகிறாள். சண்டை வேண்டாம், சமாதானம் வேண்டும் என்பதே அவள் எண்ணமாயிருந்தது.

? விசுவாசிக்கவேண்டிய சத்தியம்:

சாந்தகுணம் என்பது ஒருவரின் பலவீனம் அல்ல! சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள். மத்தேயு 5:5

? பிரயோகப்படுத்தல் :

❓ சாந்தமான வார்த்தைகளைப் பேசுகின்றேனா? இதனால் சண்டையை நிறுத்தி குடும்பத்தில் சமாதானத்தை விதைத்துள்ளேனா?

❓ நாம் வெற்றிகரமாக செய்யும் எல்லா செயலிலும் நாம் கர்த்தரை மகிமைப்படுத்துகிறோமா?

❓ ‘கர்த்தர் என் ஆண்டவனுக்கு நன்மை செய்யும்போது, உம்முடைய அடியாளை நினைப்பீராக” என்ற (வசனம் 31) அபிகாயிலின் வார்த்தையை குறித்து சிந்திப்பது என்ன?

❓ தன் கணவரைக் குறித்து அபிகாயில் கூறிய காரியம் என்ன? இன்று நமது வீட்டிலுள்ள குடும்பத்தினர் நம்மைப் பற்றி என்ன கூறவேண்டும் என எண்ணுகின்றீர்?

? தேவனுடைய செய்தி:

▪️ நீ தானாய் உருவாகவில்லை! நீ உருவாக்கப்பட்டதே  தேவனுடைய சித்தத்தை செய்வதற்காகத்தான்! மறந்து விடாதே! ஒவ்வொரு சிறிய காரியத்திலும் உன்னை வழிநடத்துபவரை மகிமைப்படுத்து!

? எனது சிந்தனை குறிப்பு :

__________________________________________________________________________________________________________________________________________________________________________

? இன்றைய விண்ணப்பம்

எமது ஒன்லைன் ஊழியங்களுக்காக ஜெபியுங்கள். ஒன்லைனுக்கூடாக எமது பணிகளை மேலும் முன்னெடுக்க நாம் திட்டமிட்டுள்ளோம். திருச்சபைக்கும் மக்களுக்கும் சேவையாற்ற, மூலோபாயத்துடன், ஒழுங்குமுறையில், வினைத்திறனுடன் முறைமைகளை மாற்றியமைக்க மன்றாடுங்கள்.

?♂️ எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532
Whats-app : 0771869710


? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin