? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜாக்கள் 19:7-10

?  நீ இங்கே என்ன செய்கிறாய்?

…எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம்… 1இராஜாக்கள் 19:9

ஒரு பெண்மணி ஒரு புரோக்கராக வேலைசெய்தபோது, பெரிய பிரமுகர்களுடன் பழகியிருந்தாள். அவள் ஒரு விசுவாசியானபோது, இனி சாதாரண வாழ்க்கை வாழ கூடாது. அர்த்தமுள்ள, பிறருக்கு ஆசீர்வாதமான நல்ல வாழ்க்கை வாழவேண்டும் என்று உணர்ந்தாள். அவளிடம் மீன் பதப்படுத்தி விநியோகிக்கும் ஒரு நிறுவனம் இருந்தது. அங்கிருந்து அவள் தன்னைப்பார்க்க வருகிறவர்களுக்கு நல்லாலோசனை கூறி, வேதாகமத்தை வாசித்து காட்டி, நல்வழிப்படுத்தி, ஆவிக்குரிய இளைப்பாறுதல் பெற உதவிசெய்ய ஆரம்பித்தாள். தான் இருக்கின்ற இந்த இடத்தை, தேவ ஊழியர்கள் தங்கி, இளைப்பாறி, கூட்டங்கள் நடத்தி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இடமாக ஆக்கவேண்டும் என்பது அவளுடைய விருப்பம். இதுதான் தேவன் என்னை அழைத்து, எனக்குத் தந்திருக்கிற ஊழியம் என்றாள்.

ஓரேப் பர்வதத்தில் தேவன் எலியாவைச் சந்தித்தார். எலியாவின் ஊழியத்தைத் தேவன் பரிசீலித்தார். தேவன் எலியாவிடம், ‘எலியாவே, நீ இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டபோது, அதன் பதிலைத் தேவன் அறிந்திருந்தார். எலியா தன் பொறுப்புகளையும் கடமைகளையும், தன் ஊழியத்தையும்கூட பின்னால் தள்ளிவிட்டதைத் தேவன் அறிந்திருந்தார். அதை அவன் உணரவேண்டும் என்று தேவன் விரும்பினார். தன் வாழ்வின் இறுதி நோக்கம் என்ன என்பதை அவன் உணரவேண்டும் என்று கருதியே அவனது சிந்தனையைத் தூண்டும்படி இக் கேள்வியைக் கேட்டார்.

‘நான் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறேன்?” இந்தக் கேள்வியை எல்லா கிறிஸ்தவர்களும் தங்களிடம் தாங்களே கேட்கவேண்டும். நான் ஏன் இன்னும் உயிரோடிக்கிறேன்? நான் என்ன செய்யவேண்டும் என்று தேவன் என்னை வைத்திருக்கிறார்? வாழ்விற்கு தேவனால் ஒரு நோக்கம் கொடுக்கப்படாத எந்த விசுவாசியும் உலகத்தில் இல்லை. தம் மனதில் ஒரு திட்டம் வைத்துக்கொண்டே தேவன் நம் ஒவ்வொருவரையும் உருவாக்கினார். நம் வாழ்வில் தேவ நோக்கத்தைக் கண்டுபிடித்து அது நிறைவேறும்படி உண்மையுடன் உழைக்கவேண்டியது நமது கடமை. ‘நீ எதற்காக இங்கே இருக்கிறாய்? நற்செய்தி அறிவித்து வாலிபர்களை பக்திவிருத்தியடைய செய்வதா? ஆலயத்தின் ஓய்வு நாட்பாடசாலையின் மூலம் முயற்சிப்பதே உங்கள் வாழ்க்கையின் நோக்கமா? வேறு தேசத்தில் திருப்பணி செய்யும் நண்பர்கள் குடும்பங்களை ஆதரித்து உதவி செய்வதா? நோயாளிகளுக்காக ஜெபிப்பதா? அனாதைகள், விதவைகள், சிறைச்சாலை கைதிகள் மத்தியில் ஊழியம் செய்வதா? என்ன செய்யவேண்டும் என்று ஆண்டவரிடம் கேளுங்கள். தேவன் உங்களுக்காக நியமித்த பணியை செய்துமுடியுங்கள்.

? இன்றைய சிந்தனைக்கு:

உங்கள் வாழ்க்கைக்கு தேவன் வைத்திருக்கும் நோக்கம் உங்கள் வாழ்க்கைக்கான அர்த்தத்தைத் தருகிறது.

? இன்றைய விண்ணப்பம்

எமது ஊழியத்திற்கு மதிப்புமிக்க ஆதரவு வழங்கும் எமது விசுவாச ஜெப தோழர்களுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். இக்காலக்கட்டத்தில், கர்த்தர் அவர்களை ஆசீர்வதிக்கவும், தேவைகளை சந்திக்கவும், பாதுகாக்கவும் மன்றாடுங்கள்.

⏩ இன்றைய தியானத்தை எழுதியவர் – டாக்டர் வுட்ரோ குரோல்

? அனுதினமும் தேவனுடன்.

எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Solverwp- WordPress Theme and Plugin