? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 24:8-12

ஆச்சரியம் மிகுந்த தருணம்!

இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள். லூக்கா 24:9

தேவனுடைய செய்தி:

இயேசுவின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து அதை அறிவிக்க வேண்டும்.

தியானம்:

கல்லறையின் அருகே நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும், மகதலேனா மரியாள், யோவன்னா, யாக்கோபின் தாயாகிய மரியாள், வேறு சில பெண்கள் ஆகியோர் நடந்த அனைத்தையும் சீஷர்களுக்குச் சொன்னார்கள்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

இயேசுவின் உயிர்த்தெழுதலை விசுவாசித்து சாட்சிகளாயிருப்போம்.

பிரயோகப்படுத்தல் :

வசனம் 11ன்படி, நடந்தவற்றைக்கூறிய அப்பெண்களுடைய வார்த்தைகள் சீடர்களுக்கு ஒரு வீண்பேச்சாகத் தோன்றியது ஏன்?

இன்று இயேசுவின் உயிர்த்தெழுதலை விசுவாசிக்க மற்றவர்களுக்கிடையே காணப்படுகின்ற தடைகள் என்ன?

பேதுரு எழுந்து அது உண்மையா எனப் பார்க்கக் கல்லறைக்கு ஓடியது ஏன்? இன்றும் இயேசுவின் உயிர்த்தெழுதலை உண்மையா என ஆராய்வோருக்கு நாம் காண்பிக்க வேண்டிய ஆதாரம் என்ன?

இயேசுவின் உடலைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த துணிகள், சீலைகள் மட்டும் தனிப்பட வைத்திருக்கக்கண்ட பேதுருவின் உணர்வு எப்படிஇருந்திருக்கும்? ஏன் அவன் ஆச்சரியப்பட்டான்?

இயேசுவைக் காணவில்லை. அவர் கல்லறையைவிட்டு சென்றுவிட்டிருந்தார் என்பதை ஏன் பேதுருவால் உடனடியாக புரிந்துகொள்ள முடியவில்லை?

இன்று பலவித சிந்தனைகளோடு உள்ள மக்களுக்கு, உயிர்த்தெழுதலின் செய்தி தரும் நிச்சயம் என்ன?

எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin