? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 20:27-39

உயிர்த்தெழுதல்

அவர் மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார். எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே என்றார்.  லூக்கா 20:38

தேவனுடைய செய்தி:

கர்த்தர் மரித்தோரை உயிர்த்தெழும்பச் செய்கிறவர்.

தியானம்:

‘ஏழு சகோதரர்கள் ஒரு பெண்ணை இவ்வுலகத்தில் திருமணம் செய்தனர். அவர்கள் எல்லோரும் குழந்தைகளின்றி இறந்தார்கள். மரணத்தினின்று மக்கள் எழும்போது, அந்தப் பெண் யாருக்கு மனைவியாவாள்?” என்ற கேள்வி மரணத்தின் பின் உயிர்த்தெழுதலை நம்பாத சதுசேயரால் இயேசுவிடம் கேட்கப்பட்டது. ‘மறுமையையும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண்கொள்வது மில்லை பெண் கொடுப்பதுமில்லை” என்று இயேசு பதிலளித்தார்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்.

பிரயோகப்படுத்தல் :

மரணத்தினின்று உயிர் பெறுவதில்லை என்று நம்பியவர்கள் யார்? ஏன்?

வசனம் 36ன்படி, உயிர்த்தெழுதலின் பிள்ளைகள் யாருக்கு ஒப்பானவர்கள்? அவர்கள் யாருடைய பிள்ளைகளாக இருப்பார்கள்?

எரியும் புதரைப் பற்றி மோசே எழுதியபோது, அவன் கர்த்தராகிய தேவனை ‘ஆபிரகாமின் தேவன் என்றும், ஈசாக்கின் தேவன் என்றும், யாக்கோபின் தேவன்” என்றும் கூறியது ஏன்?

இன்று உயிர்த்தெழுதலை நம்பாதவர்களுக்கு நீர் கொடுக்கின்ற பதில் என்ன? நமது தேவன் எப்படிப்பட்டவர் என்பதை எவ்வாறு எடுத்துரைப்பீர்?

உயிர்த்தெழுதலை சிந்திக்கும் நாம், உலகில் எவ்விதமாக வாழவேண்டும்?

எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin