மே 27, 2020 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ??


? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜாக்கள் 18:16-19

? இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீதானா?

ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான். 1இராஜாக்கள் 18:17

ஒருமுறை, புகழ்பெற்ற தொழில்முறை கோல்ப் விளையாட்டு வீரர் ஒருவர், அன்றைய ஜனாதிபதி ஜாக் நிக்கொலாஸ், பில்லிகிரகாம் ஆகியோருடன் விளையாடிக்கொண்டிருந்தார். விளையாட்டு முடிந்தபின், எதிர்பக்கத்தில் இருந்த ஒருவர் இவரிடம், ‘ஹலோ!  ஜனாதிபதி, பில்லிகிரகாம், இவர்களுடன் விளையாடியது எப்படி இருந்தது?” என்று கேட்டார். அவர் வெறுப்புடன், ‘பில்லிகிரகாம் எனது தொண்டையில் சமயத்தைத் திணிப்பது பிடிக்கவில்லை” என்று கூறிக்கொண்டு பயிற்சி தளத்துக்கு சென்றார். கேள்வி கேட்ட நண்பர் அவரைப் பின்தொடர்ந்து சென்று, அவர் கண் கண்டவற்றை தன் கால்களால் உதைத்துத் தன் கோபத்தையும் ஆத்திரத்தையும் வெளிக்காட்டியதைக் கண்டு, அவரிடம், ‘அங்கே விளையாடிக் கொண்டிருந்தபோது பில்லிகிரகாம் உங்களிடம் சற்று முரட்டுத்தனமாய் நடந்துகொண்டாரா?” என்று கேட்டார். அதற்கு அந்த வீரர், ‘அதை ஏன் கேட்கிறாய்? அவ்வேளையில் அவர் ‘சமயம்’ (Religion) என்ற சொல்லை ஒருமுறைகூட உச்சரிக்கவில்லை” என்றார்.

எலியாவும் அங்கே வாய் திறந்து ஒரு வார்த்தை தன்னும் கூறுவதற்கு முன்னரே, ஆகாப், ‘இஸ்ரவேல் தேசத்தைக் கலக்குகிறவனே” என்று குற்றஞ்சாட்டினான். இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது. உண்மையிலேயே இஸ்ரவேலைக் கலக்கிக்கொண்டிருக் கிறவன் ஆகாப் ராஜாதான். இஸ்ரவேல் தேசத்தின்மேல் தேவனுடைய நியாயத்தீர்ப்பு வரக் காரணமே ஆகாபும், அவனது முன்னோரும் தேவனுக்கு விரோதமாகச் செய்த பாவங்களும், தேவனுக்கு விரோதமாகச் செய்த செயல்களுமே. தன் குற்றங்களை மறைத்து, அவற்றைப் பற்றி நினையாமல் பழியை இன்னொருவர் மீது சுமத்துவது ஆகாபுக்கு எளிதாயிருந்தது. இஸ்ரவேலின் அனைத்துக் கலக்கத்துக்கும் காரணம் நீயே என்று தேவனுடைய மனிதனாகிய எலியாவின்மேல் குற்றம்சாட்டினான் அவன். அவனுக்குத் தன் பாவங்களையும், மீறுதல்களையும், தேவனுக்கு விரோதமான செயல்களையும் சிந்திக்க மனதில்லை.

இந்த உலகமே குற்றம் சுமத்துவதற்கென்று சம்பந்தமில்லாத ஒரு பரிசுத்தவானை தேடிக்கொண்டிருக்கிறது. குற்றஞ்சாட்டப்பட கிறிஸ்தவர்கள் சுலபமான நபர்களாய் இருக்கிறார்கள். நாம் சாட்சி கூறாவிட்டாலும், நீரோ மன்னன் காலத்திலிருந்து இன்று வரை கிறிஸ்தவர்கள் துன்பங்களையும், பாடுகளையும் அனுபவித்துக் கொண்டேயிருக்கிறார்கள். எந்தவகையிலாவது, நீங்கள் துன்பப்படுத்தப்பட்டால் ஆச்சரியப்படாதீர்கள், கவலைப்படாதிருங்கள், கிறிஸ்து உங்களுக்குள் வாழ்கிறார் என்ற உண்மையில் திடன்கொள்ளுங்கள். அவர் உங்களுக்குள் இருந்து பிரகாசிப்பாராக.

? இன்றைய சிந்தனைக்கு:

இயேசு கிறிஸ்து மட்டுமே கிறிஸ்தவர்களுக்கு ஒரு ஆறுதல்.


? இன்றைய விண்ணப்பம்


எமது ஊழியர் குழுவினருக்காக ஜெபியுங்கள், கர்த்தருடனான நெருங்கிய உறவில் ஆழமாக நாம் வளரும்படிக்கும், எமது அறிவிலும் அவரது வார்த்தைக்கு கீழ்ப்படிவதிலும், நாம் பெலனடையும்படிக்கு மன்றாடுங்கள்.

⏩ இன்றைய தியானத்தை எழுதியவர் – டாக்டர் வுட்ரோ குரோல்

? அனுதினமும் தேவனுடன்.

(இன்றைய தியானத்தை நீங்கள் http://sathiyavasanam.lk/dailyreading/ இணையத்தளத்தில் வாசிக்கலாம். நன்றி.)

எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: www.Sathiyavasanam.lk | Backtothebible.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

1,584 thoughts on “மே 27, 2020 புதன்