? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1இராஜாக்கள் 18:1-14

?  போய்ச் சொல்.

அவன், நான்தான். நீ போய், இதோ, எலியா வந்திருக்கிறான் என்று உன் ஆண்டவருனுக்குச் சொல் என்றான். 1இராஜாக்கள் 18:8

பல வருஷங்களுக்கு முன்பு, லண்டனில், ராயல் ஆல்பர்ட் ஹால் மண்டபத்தில் ஒரு பெரிய மிஷனெரி பேரணி நடைபெற்றது. வெல்லிங்டன் நகரத்தின் பிரபு அங்கு இருந்தார். இவர்தான் நெப்போலியன் போனபார்ட்டின் சேனையைத் தோற்கடித்தவ. ஒரு போதகர் அவரிடம், ‘என் ஆண்டவனாகிய பிரபுவே! உங்களுக்கு நற்பணிகள் மீது நம்பிக்கை உண்டா?” என்று பிரபுவிடம் கேட்டா ர் . அதற்குப் பிரபு,  ‘உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டளைகள் எவை?” என்று போதகரிடம் கேட்க, உடனே போதகரும், ‘நீங்கள் உலகம் எங்கும் போய் நற்செய்தியை அறிவியுங்கள் என்பதே” என்ற ர். அதற்குப் பிரபு, ‘அப்படியானால் மேலே கூற உங்களிடம் ஒன்றுமில்லை. ஒரு சாதாரண போர்வீரனைப்போல கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும், அவ்வளவுதான்” என்றார்.

ஒபதியா எலியாவைச் சந்தித்தபோது, போர்வீரன் பெறுவதுபோன்ற செயல் கட்டளைகளைப் பெறுகிறான். எலியா, ஆண்டவர் கட்டளையிடுவதைப்போல, ‘நீ போய் ஆகாப் ராஜாவிடம் எலியா வந்திருக்கிறார் என்று சொல்” என்று ஒபதியாவிடம் சொன்னான். அதாவது, ‘இஸ்ரவேலை ஆண்ட ராஜாக்களில் தேவனை ஏற்காத ராஜாக்களில் ஒருவனான ஆகாபிடம் சென்று, தேவனுடைய பேச்சாளனான எலியா வந்திருக்கிறான் என்று அவனிடம் சொல்” என்றான். இது ஒரு ‘கட்டளை. ஒபதியா பயப்பட்டான். அவன் எலியாவிடம், ‘நீர் என்னை மரணத்தைச் சந்திக்கவா அனுப்புகிறீர்?” என்று கேட்டான். ‘நான் போய் ராஜாவிடம் எலியா வந்திருக்கிறார் என்று அறிவிக்க, அதற்குள் நீர் மறைந்து போய்விட்டால் ஆகாப் ராஜா என்னைக் கொன்றுபோடுவானே. அதற்குத்தான் பயப்படுகிறேன்” என்றான். எலியா கூறிய உறுதிமொழியைக் கேட்டு, அவன் கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிந்தான் ஒபதியா.

உயிர்த்தெழுந்த இயேசு, சீஷர்களிடம், ‘போங்கள்” ‘செல்லுங்கள்” (மத்.28:19,20) என்ற கட்டளையைத்தான் கொடுத்தார். இக்கட்டளைகள் வாக்குவாதம் செய்வதற்குரியதல்ல. நமக்குப் பயம் இருக்கலாம்; ஆனாலும், இவை இரட்சகரின் கட்டளைகள்; நாம் கடைபிடிக்கவேண்டிய அறிவுரைகள். ‘நீங்கள் போய், சுவிசேஷத்தை அறிவிக்க ஆயத்தமா? நீங்கள் செல்லவேண்டியது அயல்வீட்டார், உங்கள் சக ஊழியர், அல்லது தொலைவில் வசிக்கும் ஒருவர், யாராகவும் இருக்கலாம். பணி எப்படிப்பட்டதாயிருந்தாலும் ஆண்டவருக்குக் கீழ்ப்படிதல் ஒன்றே நமது பயத்தைப் போக்கும் வழி. நாம் கர்த்தருக்குக் கீழ்ப்படியும்போது, நமது பயத்தைப் போக்கும் பொறுப்பை அவர் ஏற்பார். நமக்குக் கிடைத்திருக்கும் கட்டளை தெளிவானது: ‘போங்கள்” ‘அறிவியுங்கள்”.

? இன்றைய சிந்தனைக்கு:

தேவனுடைய கட்டளைகளைப் பொறுத்தவரை அது தெளிவாயிருக்கிறதா என்பது பிரச்சனை அல்ல; அதற்கு நம்மை அர்ப்பணம் செய்வதே முக்கியம்.

? இன்றைய விண்ணப்பம்

எமது தபால்வழி வேதபாடங்களை கற்றுக்கொள்பவர்களுக்காக ஜெபியுங்கள். தடைப்பட்ட அஞ்சல் சேவை காரணமாக அவர்களுடனான தொடர்பை எம்மால் சரிவர பேண முடியாதுள்ள நிலைமையில் அவர்களுடனான எமது தொடர்பை மீண்டும் தொடங்கும்படிக்கும், மிகவும் திறம்பட எமது சேவையை நாம் வழங்கத்தக்கதாக மாற்றியமைக்க வேண்டிய எமது முறைமைகளை சரிசெய்யும்படிக்கும் மன்றாடுங்கள்.

⏩ இன்றைய தியானத்தை எழுதியவர் – டாக்டர் வுட்ரோ குரோல்

? அனுதினமும் தேவனுடன்.

(இன்றைய தியானத்தை நீங்கள் https://www.facebook.com/sathiyavasanam தளத்தில் வாசிக்கலாம். நன்றி.)

 எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: www.Sathiyavasanam.lk | Backtothebible.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Comments (149)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *