குறிப்பு-

வாசகர்களாகிய உங்களுடைய தியானத்திற்கென்று பிரதி சனிக்கிழமையை நாம் தெரிந்துள்ளோம். உங்கள் தியானத்திற்கு உதவியாக 1சாமுவேல் 25 ஐ வாசித்துத் தியானித்து, உங்கள் சிந்தனைகளை குறித்துக் கொள்ளுங்கள். நீங்களும் தியானிப்பதற்கான முயற்சிகளில் பயிற்சியெடுங்கள். பயன்பெறுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். நன்றி. – தொகுப்பாசிரியர்.

? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1சாமுவேல்  25:1-12

?  வனாந்திரம் போன்ற வாழ்க்கை

நாங்கள் அவர்களை வருத்தப்படுத்தவில்லை. அவர்களுடைய பொருள் ஒன்றும் காணாமற் போனதும் இல்லை 1சாமுவேல் 25:7

? தியான பின்னணி:

சாமுவேல் மரணமடைந்த பின்பு தாவீது எழுந்து பாரான் வனாந்திரத்துக்குச் சென்றான். நாபால் என்ற செல்வந்தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கிற செய்தியைக் கேட்டபோது, உம்மால் முடிந்த உதவியை கொடுக்கும்படி வேண்டி 10 வாலிபரை தாவீது அனுப்பினான். ஆனால் நாபாலோ அவர்களுக்கு உதவி செய்யவில்லை.

? பிரயோகப்படுத்தல் :

❓ நாபாலின் மேய்ப்பர்களுக்கு நன்மை செய்த தாவீதுக்கு நாபாலின் மறுத்தரம் என்னவாக இருந்தது? எவ்விதத்தில் தாவீதும் அவனது வேலையாட்களும் நாபாலின் மேய்ப்பர்களுக்கு நன்மை செய்தனர்?

❓ நான் யாரிடத்திலாவது எதையாகிலும் எதிர்பார்க்கின்றேனா? தேவன் தந்த யாவும் நன்மைக்கேதுவானது என்பதை மறவாமல் இருப்பேனாக!

❓ பிறர் எனக்கு உதவி செய்ய மறுக்கும்போது எனது மனப்பான்மை என்ன? நன்றியை எதிர்பார்த்த தாவீதுக்கு நாபால் அளித்த பதில் போல நான் நடந்துகொண்டதுண்டா?

❓ எனது வாழ்வு வனாந்திரம்போல தோன்றினாலும் எனது நம்பிக்கையை நான் யார் மீது வைத்திருக்கின்றேன்?

? தேவனுடைய செய்தி:

▪️ கர்த்தரை நம்பி நன்மை செய். பொல்லாத மனுஷர்மேல் பொறாமை கொள்ளாதே (நீதிமொழிகள் 24:1)

? விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

▪️ தேவன் எனது தேவையை சந்திப்பவர்.

▪️ வேதனைகளை தீர்ப்பவர். என்னைக் காண்கிறவர்.

▪️ தேவன் எந்த சூழ்நிலையிலும் எம்மோடு இருக்கிறார்.

? எனது சிந்தனை குறிப்பு :

__________________________________________________________________________________________________________________________________________________________________________

? இன்றைய விண்ணப்பம்

நமது தேசத்தில் மாதாந்த சம்பளம் பெறாதவர்கள் மற்றும் அன்றாட கூலியை சம்பாதிக்க முடியாமல் இருப்பவர்களுக்காக ஜெபியுங்கள். அரசாங்கத்தின் சரிசமமாக விநியோகித்தலுக்கூடாக, தேவ பிள்ளைகளின் தாராள கொடுத்தலின் ஊடாக அவர்களின் தேவைகளை கர்த்தர் சந்திக்கும்படி மன்றாடுங்கள்.

? அனுதினமும் தேவனுடன்.

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: www.Sathiyavasanam.lk | Backtothebible.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Comments (38)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *