[📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு :லூக்கா 23:6-12
ஏரோதுவின் முன் இயேசு
முன்னே ஒருவருக்கொருவர் பகைவராயிருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையத்தினம் சிநேகிதரானார்கள். லூக்கா 23:12
தேவனுடைய செய்தி:
ஏரோதுபோல அநேகர் இன்றும் இயேசுவைக் குறித்து அநேக காரியங்களைக்கேள்விப்பட்டு, அவர் செய்யும் அற்புதங்களைப் பார்க்க விரும்பி, அவரை காண ஆசைப்பட்டாலும், சந்தோஷப்பட்டாலும், இயேசுவின் வார்த்தைகளின்படி நடக்க விருப்பமற்றவர்கள் பலர் உண்டு.
தியானம்:
இயேசு கலிலேயாவிலிருந்து வந்தவரா? என்று வினவிய பிலாத்து, அது ஏரோதின்அதிகாரத்திற்குட்பட்ட பகுதி என அறிந்து இயேசுவை ஏரோதிடம் அனுப்பினான். இயேசுவோ ஏரோதுவின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.
விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:
வேத வார்த்தைகளை விசுவாசியாமல், வெறுமனே விபரங்களை மாத்திரம், அறிந்துகொள்ள முயற்சிப்பவர்களைக் குறித்து கவனமாயிருக்கவேண்டும்.
பிரயோகப்படுத்தல் :
அநேக காரியங்களைக்குறித்து அவரிடத்தில் வினாவியபோதிலும், இயேசு ஏரோதிடம் மறுமொழியாக ஒன்றுமே கூறாததற்கு காரணம் என்ன?
“பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவர்மேல் பிடிவாதமாய்க் குற்றஞ்சாட்டிக்கொண்டே நின்றார்கள்.” இன்றும் சபையில் இவ்விதமாக நடந்து கொள்கின்றவர்களை நீங்கள் கண்டதுண்டா? உமது பிரதியுத்தரம் என்ன?
ஏரோது இயேசுவைக்குறித்து கேள்விப்பட்டது என்ன? ஆசைப்பட்டது என்ன? பார்க்க விரும்பியது என்ன? ஏன் அவன் சந்தோஷப்பட்டான்? எனினும் இறுதியில் அவன் செய்த காரியம் என்ன?
ஏரோதுவும், பிலாத்துவும் நண்பர்களானதற்கு யார் காரணம்?
எனது சிந்தனை:
📘 அனுதினமும் தேவனுடன்.
