? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோவான் 11:1-26

தாமதத்தைத் தாங்குவேனா?

மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து, ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். யோவான் 11:21

தேவனுடைய செய்தி:

அடைக்கலான் குருவிகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுகிறதில்லை.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

மறைக்கப்பட்டிருப்பது எதுவும் வெளியாக்கப்படாமல் போவதில்லை. ஒளித்துவைக்கப்பட்டது எதுவும் தெரியவராமல் போவதுமில்லை.

பிரயோகப்படுத்தல் :

வசனம் 2ன்படி, எமது வாழ்க்கை, சொற்கள், சிந்தனைகளைக் குறித்து நாம் கவனமாயிருப்பது அவசியமானதா? அதில் கவனமாயிருப்பது எப்படி?

யாருக்கு நாம் பயப்படவேண்டும்? நம்மை நரகத்தில் தள்ள வல்லமையுள்ள இறைவனுக்கு பயப்படாதவர்களாக இருப்பவர்களைக் குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?

இயேசுவைப் பற்றிக் கூற என்னிடத்தில் உள்ள தடை என்ன? வெட்கம், கௌரவம், பெருமை போன்றவற்றால் நான் இழப்பது என்ன?

யாருக்கு எதிராக செய்யும் பாவத்திற்கு மன்னிப்பு இல்லை என வசனம் கூறுகின்றது?

வசனம் 12ன்படி, நமக்கு பரிசுத்த ஆவியானவர் கற்பிக்கின்ற காரியம் என்ன?

நம்மையும் நமது சரீரத்தையும் அழிக்க நினைப்பவர்களால் அதற்குப் பிறகு ஒன்றுமே செய்ய முடியாது. அப்படியானால் அதற்குப் பிறகுள்ள வாழ்க்கைக்காக நான் இன்று என்ன ஆயத்தம் செய்துள்ளேன்?

எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *