ஜுலை – ஆகஸ்ட் – செப்டெம்பர் சத்தியவசனம் சஞ்சிகை

திருப்தியுடன் ஜெபியுங்கள்.

நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். (பிலிப்பியர் 4:11)

‘ஆண்டவரே, நான் எல்லா சூழ்நிலையிலும் திருப்தியாக இருப்பதற்காக நன்றி.”

பயமில்லாமல் ஜெபியுங்கள்.

கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர்  என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்? (சங்கீதம் 27:1)

‘உம்மைத்தவிர, எதற்கும் நான் பயப்படவேண்டியதில்லை. நன்றி ஆண்டவரே.”

இடைவிடாமல் ஜெபியுங்கள்.

இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள் (1தெசலோனிக்கேயர் 5:17,18)

‘ஆண்டவரே, எனது தேவைகளை நீர் சந்திப்பதற்காக நன்றி. சந்திக்கப்படாத தேவைகளுக்காக உம்மையே நோக்கிப் பார்க்கிறேன். ஆமென்.”

அன்புடன் ஜெபியுங்கள்.

உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். (மத்தேயு 5:44)

‘ஆண்டவரே, நீர் அன்புகூரும் வண்ணமாக, நிபந்தனையின்றி, மற்றவர்கள் மேல் அன்பு பாராட்ட உதவிசெய்யும். ஆமென்.”

பாதுகாக்கப்பட்ட நாவினால் ஜெபியுங்கள்.

கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்த புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.(எபேசியர் 4:29)

‘ஆண்டவரே, மற்றவர்களை நான் உருகுலைத்து விடாமல், கட்டியெழுப்பும்படியாக என் பேச்சைக் காத்துக்கொள்ள உதவும். ஆமென்.”

சுய மதிப்புடன் ஜெபியுங்கள்.

தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது. மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர் களாயிருக்கிறீர்கள். (கொலோசெயர் 2:10)

‘ஆண்டவரே, நான் முக்கியத்துவம் அடைவது உம்மாலேதான். அதற்காக நன்றி.”

முழு பெலத்துடன் ஜெபியுங்கள்.

உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.  (1தெசலோனிக்கேயர் 5:24)

‘நன்றி ஆண்டவரே, நீர் எதற்காக என்னை அழைத்தீரோ அதை நான் செய்துமுடிக்க உமது பெலனை தந்து உதவி செய்வதற்காக நன்றி.”

மக்களையும் அவர்கள் விருப்பத்தையும் பிரியப்படுத்த நினைக்காமல், உங்கள் பார்வையை ஆண்டவர் மேல் திருப்புங்கள்.

Comments (57)

 1. Reply
 2. Reply
 3. Reply
 4. Reply
 5. Reply
 6. Reply
 7. Reply
 8. Reply
 9. Reply
 10. Reply
 11. Reply
 12. Reply
 13. Reply
 14. Reply
 15. Reply
 16. Reply
 17. Reply
 18. Reply

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *