📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 19:11-27
இருப்பதைப் பயன்படுத்துங்கள்
உள்ளவன் எவனுக்குங் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் லூக்கா 19:26
தேவனுடைய செய்தி:
மக்களின் எண்ணத்தை இயேசு அறிந்திருந்தார்.
தியானம்:
ஒரு மன்னனாக நியமனம் பெற்று திரும்பி வந்து மக்களை ஆளவிரும்பிய ஒரு பிரபு, தனது பத்து வேலைக்காரை அழைத்து ஒவ்வொருவருக்கும் பணம் கொடுத்தான். அவன் அந்நாட்டின் அரசனான பின்பு, வேலைக்காரரின் முன்னேற்றத்தை அறிய விரும்பினார். சிறிய காரியங்களில் உண்மையாய் இருந்த அவர்களை பட்டணங்களுக்கு அதிபதியாக்கினான். உண்மையற்றவனைப் பொல்லாத ஊழியக்காரன் என்றார். அவனிடம் இருப்பது எல்லாவற்றையும் பறித்தார்.
விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:
தன்னிடம் இருப்பவற்றைப் பயன்படுத்துகிறவனுக்கு இன்னும் அதிகமாகக் கிடைக்கும். தன்னிடம் இருப்பவற்றைப் பயன்படுத்தாத மனிதனிடம் இருப்பவையும் எடுத்துக்கொள்ளப்படும். (வச.26)
பிரயோகப்படுத்தல் :
வசனம் 13ன்படி, “இந்தப் பணத்தைக்கொண்டு நான் வரும் வரைக்கும் வியாபாரம் செய்யுங்கள்| என்று எஜமான் கூறினால் நான் என்ன செய்ய வேண்டும்? அந்த எஜமானே அரசனாக இருந்தால் எப்படி?
இராஜ்யத்தின் மக்கள் அரசனை வெறுத்தார்களா? ஏன்? அவர்களின் பின் விளைவு என்ன? (வசனம் 14, 27)
பத்து பட்டணத்திற்கும், ஐந்து பட்டணத்திற்கும் அதிபதியானவனின் முயற்சி எப்படிப்பட்டது? இன்று நான் எதில் உண்மையாயிருக்கிறேன்?
வசனம் 20-24 இன்படி அப் பணத்தைப் பெற்றவனின் நிலைப்பாடு என்ன?
வசனம் 26ன்படி, உள்ளவனிடம் இன்னும் அதிக பொறுப்புக்கள், வளங்கள், தாலந்துகள் அதிகமாக வழங்கப்படுவது ஏன்?
எனது சிந்தனை:
📘 அனுதினமும் தேவனுடன்.