ஜூலை 27 வியாழன்

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எபே 2:1-22

கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்

அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார். கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். எபேசியர் 2:5

ஒருவர் பணக்கஷ்டத்தின் நிமித்தம் பலரிடம் கடன்பட்டு, கடைசியில் பெரிய கடனாளியானான். அவனால் தனது கடனைத் திரும்ப அடைக்கவும் முடியவில்லை, இனிக் கடன் கேட்கவும் யாரும் இல்லை. மிகவும் விரக்தி அடைந்தவனாக, ஒரு கடதாசியில் தான் கொடுக்கவேண்டிய கடன் விபரத்தை எழுத ஆரம்பித்தான். எழுதிக் களைத்துப்போய் அப்படியே உறங்கிவிட்டான். அவ்வழியே உளவுக்காக மாறுவேடத்தில் வந்த அரசன் அவனது கடன் பட்டியலைப் பார்த்துவிட்டு, “உனது கடன் முழுவதையும் நான் தீர்த்தாயிற்று, நீ மகிழ்ச்சியோடு இரு” என்று எழுதி வைத்துவிட்டு, அவனது கடன் பட்டியலை எடுத்துச் சென்றுவிட்டார். மறுநாள் கண்விழித்தவனுக்கு எதையும் நம்பமுடியவில்லை. என் கடன் அடைக்கப்பட்டதா! அவன் வியந்து நின்றான்.

பாவக்கடன் மிகுதியால் களைத்து இளைத்திருந்த நமக்கு எந்தத் தகுதியும் இல்லாதிருந்தும் ஆண்டவர் கிருபையாய் நமது கடன் யாவையும் சிலுவையில் செலுத்தி நமக்கு இரட்சிப்பைத் தந்தார். முற்றிலுமாய் அவருடைய கிருபையினாலேயே நாம் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டோம். இந்த மகா பெரிய இரட்சிப்பைக் குறித்து நாம் அஜாக்கிரதையாய் இருக்கலாமா? மீண்டும் மீண்டும் பாவத்தில் விழலாமா? ஆண்டவருடைய கிருபையை நாம் நமக்குச் சாதமாக்கிக்கொள்ளலாமா?  தேவனுக்கு எதிரான காரியங்களைச் செய்த நமக்கு தேவன் கிறிஸ்துவுடன் புது வாழ்க்கையைத் தந்தார். தேவனின் கிருபையால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். இனி அக்கிருபைக்கு உண்மையாய் தேவனுக்கு முன்பாக நடக்க வேண்டுமல்லவா!

முன்பு மாம்சத்தின்படி நடந்து மாம்சம் விரும்பினவைகளைச் செய்தோம். ஆனால்இப்போது கிறிஸ்துவின் மீட்பைப் பெற்றவர்களாய், அவரது பிள்ளைகளாய் வாழ அழைக்கப்பட்டுள்ளோம். எனவே அதை உணர்ந்தவர்களாய் எமது பழைய பாவ வாழ்வை விட்டு முற்றிலுமாய் வெளிவருவோம். அவரது மீட்பை அறியாதவர்களுக்கு, அவரது கிருபையை உணராதவர்களுக்கு அதை அறிவிக்கும்படிக்கு முன்நிற்போம். இரட்சிப்பு கிருபையினால் உண்டான தேவனுடைய ஈவு. இது எமது கிரியைகளால் உண்டானதல்ல. அது முற்றிலுமாய் தேவனுடைய ஈவு. இந்த ஈவை அறியாதவர்களாய் அனுதினமும் அழிந்துபோகும் ஆத்துமாக்களுக்கு இதை அறிவிப்பது யார்? கிருபையினால் இரட்சிப்பைப் பெற்றுக்கொண்ட நம்மிடம்தான் அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இலவசமாய் பெற்றோம், அதை இலவசமாய்க்; கொடுப்போம். ஆத்துமா ஒன்றும் ஆதாயம் செய்யாமல் வெட்கத்தோடே வெறுங்கையனாய் ஆண்டவர் முன்னிலையில் நாம் நிற்க வேண்டாம். இன்றே புறப்படுவோம்.

💫 இன்றைய சிந்தனைக்கு:

   கிருபை, இதை எப்படிப் புரிந்திருக்கிறேன். பிறரும் கிருபையைப் பெற்றுக்கொள்ள அவர்களை இயேசுவண்டை நடத்துவேனா?

📘 அனுதினமும் தேவனுடன்.

8 thoughts on “ஜூலை 27 வியாழன்

 1. Hey there! I know this is kind of off-topic however I needed
  to ask. Does operating a well-established blog like yours take a large amount of work?
  I’m completely new to writing a blog but I do write in my diary daily.
  I’d like to start a blog so I will be able to share my personal experience and thoughts online.
  Please let me know if you have any ideas or tips for new aspiring blog owners.

  Thankyou!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin