ஜூலை 19 புதன்

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : கலா 4:1-20

பாரப்பட்ட உள்ளம்

என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன். கலாத்தியர் 4:19

“வயது சென்ற ஒரு தாயார் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபோது, அவரை தொடர்ந்து கர்த்தருக்குள்ளாகப் பெலப்படுத்தும் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது. அப்படியேசெய்துவந்தபோது, ஒருநாள் ஒரு கடிதம் வந்தது. அவர் கர்த்தருக்குள் நித்திரையடைந்து விட்டதாகவும், அவரது டயரியில் எனது பெயர் “கடவுளின் பிள்ளை” என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், எனவே தங்கள் தாயாரின் மரணத்தை அறியத்தருவதாக வும் அதில் எழுதியிருந்தது. கண்கள் கலங்க, ஆண்டவருக்குள் நான் பெற்றெடுத்த ஒரு பிள்ளை இன்று மோட்சத்தைச் சேர்ந்துவிட்டார் என்று தேவனைத் துதித்தேன்” என்று ஒருவர் தன் சாட்சியைக் கூறினார்.

மறுபுறத்தில், நம்மோடு சேர்ந்து ஒன்றாக கர்த்தரை ஆராதித்தவர்கள், திடீரென விசுவாசத்தை விட்டு வழிவிலகிப் போனால் அது எவ்வளவு துக்கமாகவும், மனதுக்குபாரமாகவும் இருக்கும். இந்த உணர்வுடனே தான் இங்கே பவுல் கலாத்தியரைக் குறித்து நினைத்து எழுதுகிறார். “நான் நல்ல காரியத்தை அதாவது, சத்தியத்தை சொன்னேன். அதனாலே உங்களுக்கு சத்துருவாக மாறிவிட்டேனோ? என்னை நீங்கள் எவ்வளவாய் உபசரித்தீர்கள், ஏற்றுக்கொண்டீர்கள். ஆனால் இப்பொழுதோ ஒரு சத்துருவைப் பார்ப்பதுபோலப் பார்க்கிறீர்கள். ஆனாலும் நான் ஓய்ந்து போகமாட்டேன். கிறிஸ்து உங்களில் உருவாகுமட்டும் நான் தொடர்ந்து பிரயாசப்படுவேன். அந்தப் பிரயாசம் எப்படிப்பட்டதென்றால், நான் மீண்டும் கர்ப்பவேதனைப்படுவேன்” என்கிறார். அந்தளவு அவரது உள்ளம் அவர்களுக்காகப் பாரப்பட்டது.

கர்ப்பவேதனை என்பது வாழ்வுக்கும் சாவுக்கும் இடைப்பட்டது. அந்தளவுக்கு பவுல் இந்த கலாத்திய சபையின் பின்மாற்றத்தைக் கண்டு பாரப்படுகிறார். சத்தியத்தைக் கேட்டு நன்றாக இருந்தவர்கள், இப்போ பின்மாற்றம் அடைந்ததால் அவர்களுக்காக மீண்டும் தான் கர்ப்பவேதனை அடைவதாக எழுதுகிறார். “நீங்கள் அறியாமலிருந்த காலத்தில் இவ்வுலக வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டிருந்தீர்கள். இப்பொழுது தேவனைஅறிந்திருக்க, வெறுமையான வழிபாடுகளுக்குத் திரும்புவது என்ன?” என்று கேட்கிறார். “இப்போ தவறான யாவற்றினின்றும் கிறிஸ்து விடுதலை தந்துவிட்டார். நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாயிற்றோ என்று பயந்திருக்கிறேன்” என்கிறார் பவுல்.

இந்தப் பாரப்படும் இதயம் நமக்குண்டா? விசுவாசத்தை விட்டு வழிவிலகிப் போகிறவர்களைக் குறித்துக் கரிசனை கொண்டிருக்கிறோமா? கிறிஸ்து அவர்களுக்குள் உருவாகுமளவும் எனது பொறுப்பை உணருகின்றேனா?

💫 இன்றைய சிந்தனைக்கு:  

பிறரின் பின்மாற்றத்தைக் கண்டு பாரப்படாத இதயம் எப்படிப்பட்டது? அவர்களும் மனந்திரும்ப நான் வாய்ப்பை நல்குவேனாக.

📘 அனுதினமும் தேவனுடன்.

749 thoughts on “ஜூலை 19 புதன்

  1. Serum tumor markers, although not specific enough to make a analysis, are helpful in following a patientпїЅs progress on remedy. God might be disenchanted because I keep failing and messing up, so that is why He is not listening to my prayers. These signs might 38% when a number of neurotoxic brokers are used (Cavaletti & have an effect on the ability to bend or stoop or to carry objects erectile dysfunction treatment in qatar discount tadapox 80mg on-line.

  2. In contrast to other industrial countries, the incidence of breast cancers has constantly increased since the 1990s in Japan along with the habitual changes of food intake from Japanese to Western styles Katanoda et al cialis dosage

  3. anthracis has little to no interaction with host microbiome, making horizontal genetic transfer extremely unlikely priligy pills Direct activation of peroxisome activated receptor О± by FF can also have potential blood pressure lowering effects during Ang II hypertension

  4. Myocardial ischaemia Myocardial ischaemia is caused by a number of of the following mechanisms: i) Diminished coronary blood fow. Second Surgery If you might be (your baby is) given chemotherapy, you (your child) shall be evaluated for the possibility of a second surgical procedure after the completion of chemotherapy. If both is constructive, confrm chronicity using a new specimen collected a minimum of 12 weeks later stress gastritis diet purchase 5mg ditropan fast delivery.

  5. It’s essential • avoid uncooked or undercooked meat that pregnant girls and youngsters aren’t • wash your arms around throughout renovations that disturb lead- based paint. Raised parathyroid hormone ranges in the milk-alkali syndrome: an appropriate responsefi. The time period “Emanuel Syndrome” was welcomed as a unifying name for our families, and is slowly being adopted by the medical neighborhood blood pressure 7744 purchase 5mg prinivil.

  6. Я играю в онлайн-казино уже много лет, и Gama Casino точно выделяется среди множества платформ. Их интерфейс интуитивно понятен, что позволяет легко найти любимые игры. Большой выбор слотов, настольных игр и живого казино удовлетворит вкусы любого игрока. Кроме того, быстрые выплаты и отзывчивая служба поддержки делают Gama Casino одним из моих любимых мест для азартных развлечений.
    Больше на сайте https://dou33magadan.ru/