? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜாக்கள் 19:3-5

? அது போதுமா?

போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும். நான் என் பிதாக்களைப் பார்க்கிலும் நல்லவன் அல்ல… 1இராஜாக்கள்19:4

டச்சு தேசத்து பிரபல கலைஞர் வின்சென்ட்பென் கோஹ், தனது 24 வது வயதில் சுவிசேஷ ஊழியத்துக்குத் தான் அழைக்கப்பட்டதாக உணர்ந்து, 1878ல் ஒரு நற்செய்திப்பணி பயிற்சி மையத்தில் சேர்ந்தார். அங்கே பட்டம் பெற்றபின், ஒருவருட காலம் போதகராக ஊழியம் செய்து, நற்செய்தி அறிவித்துவந்தார். பின்னர் 1889ல் பென் கோஹ் தனது நற்செய்திப்பணிக்கான அழைப்பைத் துறந்துவிட்டார். காரணம் தெரியவில்லை. 1889 ல் கோஹ், ஒரு துரத்தப்பட்ட மகனைப்போல ஓவியங்கள் தீட்டத் தொடங்கினார். இரண்டு வருடங்களுக்குள் 200 ஓவியங்களைத் தீட்டிமுடித்தார். தனது 37வது வயதில் குழப்பமடைந்தவராக, வறுமையடைந்தவராக, பலவீனமடைந்தவராக, சுகமற்றவராக மாறிய அவர், ஒரு துப்பாக்கியை இரவலாக வாங்கி, அதனால் தன்னையே சுட்டு, வாழ்வை முடித்துக்கொண்டார். வாழ்வில் தான் அடையவேண்டிய அனைத்தையும் பெற்றுவிட்டதாக கருதி தன் வாழ்வையே அவர் முடிக்கத் தீர்மானித்தார்.

எலியாவும் தன் வாழ்வில் எல்லாவற்றையும் அனுபவித்து முடிந்ததென நினைத்தார். தான் தற்கொலை செய்வதைவிட தேவன் தன் உயிரை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார். ஆனால் தேவன் எலியாவுக்கு வேறு திட்டம் வைத்திருந்தார்.  சிரியாவின் ராஜாவை அபிஷேகம் செய்தல், இஸ்ரவேலின் ராஜாவை அபிஷேகம் செய்தல், அற்புதமாக யோர்தானைக் கடத்தல் போன்ற பல காரியங்களை எலியா நிறைவேற்ற வேண்டியிருந்தது. எனவே, தேவன் எலியாவைப் பலப்படுத்தித் திடப்படுத்தி திரும்பவும் தீர்க்கதரிசி ஊழியத்தைச் செய்யும்படி அனுப்பினார்.

ஒரு கிறிஸ்தவனின்; தற்கொலை, அவன் தேவனுக்காக செய்யும் சேவையின் காலத்தை வெட்டிக் குறைத்துவிடுகிறது. பரலோகத்தில் நாம் பெறப்போகும் வெகுமதிகள் பூலோக  வாழ்வில் நாம் நல்ல செயல்களின் அடிப்படையில்தான் அமைந்திருக்கும் (2கொரி.5:10) நாம் இழந்துவிட்ட நன்மை செய்யக்கூடிய நல்ல சந்தர்ப்பங்களை, இனிமேல் திரும்பவும் பெறமுடியாது. இழந்தது இழந்ததுதான். ஆக, சோர்வடையும் வேளைகளில் ‘வாழ்ந்தது போதும்” என்று கூறவேண்டாம். ‘நான் இனி தேவனோடு இணைந்து வாழ விரும்பவில்லை” என்று கூறினால் உங்கள் வாழ்க்கை பரிதாபமே. மாறாக, உங்களைப் புரிந்துகொள்ளக்கூடிய உங்கள் ஆண்டவரிடம் பிரச்சனைகளையெல்லாம் வைத்து விடுவீர்களானால், அவர் உங்கள் வாழ்வை மறுபடியும் புதுப்பிப்பார். கிருபை தந்து வழிநடத்துவார். தேவன் உங்கள் வாழ்வில் என்னென்ன திட்டம் வைத்துள்ளார் என்பதை யார் அறிவார்? உங்கள் ஆயுளில் மீதியாய் உள்ள கொஞ்சக் காலத்தில் எதிர்பார்க்காத பெரிய காரியங்களை நடப்பிக்க ஆண்டவர் வல்லவராயிருக்கிறார்.

? இன்றைய சிந்தனைக்கு :

நாம் தேவனைவிட்டு விலகாமலிருக்க வேண்டும். ஆண்டவர் உங்கள் வாழ்வில் கிரியை செய்வதை ருசிபார்க்க ஆயத்தமாயிருங்கள்.


? இன்றைய விண்ணப்பம்

நிர்வாக குழுவினருக்கும் இயக்குநருக்கும் தலைமைத்துவ குழுவினருக்குமான ஞானத்திற்காக ஜெபியுங்கள், தற்போதைய சூழலில் எமது பணிகளை எவ்வாறு நாம் தொடருவது என்பதைக் குறித்த தீர்மானங்களை எடுக்க மன்றாடுங்கள்.

⏩ இன்றைய தியானத்தை எழுதியவர் – டாக்டர் வுட்ரோ குரோல்

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம் Back Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532
Whats-app : 0771869710

295 thoughts on “ஜுன் 8, 2020 திங்கள்”
  1. I really love to read such an excellent article. Helpful article. Hello Administ . Onwin engelsiz giriş adresi ile 7/24 siteye butonlarımızla erişim sağlayabilir ve Onwin üyelik işlemini 3 dakika da halledebilirsiniz. onwin , onwin giriş , onwin güncel giriş , onwin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin