? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1இராஜாக்கள் 18:35-39

?  எப்போதும் பரிபூரணம்

அப்பொழுது கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து. 1இராஜாக்கள் 18:38

பல தடவைகளில், சிறு சிறு விஷயங்கள் நம்மை ஏமாற்றிவிடுகின்றன. இதற்கு ஒரு சோகமான உதாரணம் உண்டு. கீழைநாட்டு விமான சேவையில் ஒரு ஜம்போ ஜெட் விமானம்; புளாரிடாவில் உள்ள ஆபத்தான மலைச்சிகரத்தில் மோதி விபத்துக்குள்ளாயிற்று. 401 என்ற எண் உள்ள இந்த விமானம் நியூயோர்க்கிலிருந்து மியாமிக்கு சென்றுகொண்டிருந்தது. உல்லாசமாக விடுமுறையைக் கழிக்கும் பயணிகள் அந்த விமானத்தில் நிறைந்திருந்தார்கள். மியாமி விமானநிலையத்துக்கு வந்து சேர்ந்த போது, விமானத்தை கீழே இறக்க விமானி எல்லா வேலைகளையும் செய்தார். இறங்குவதற்குரிய எல்லா இயக்கங்களும் சரியாக உள்ளனவா என்பதை ஒரு மீட்டர், மின்குமிழ் எரிவதன்மூலம் காட்டும். அந்த மின்குமிழ் எரியவில்லை. விமானி அறியவேண்டிய தகவல் கிடைக்கவில்லை. அந்த மின்குமிழைக் கழற்ற முயற்சித்தனர்; முடியவில்லை. அவ்வேளையில் விமானம் தன் உயர நிலையை விட்டுத் தாழ்ந்து பறந்து சதுப்புநிலக் காட்டில் விழுந்து சேதமடைந்தது. இந்த விமான விபத்தில் பலர் உயிரிழந்தார்கள்.

அன்று அக்கினியினால் பலியை ஏற்றுக்கொண்ட தேவனுடைய செயலுடன், மனிதரின்; செயலால் ஏற்பட்ட விமான விபத்தையும், உயிர்ச் சேதத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். தேவன் தமது செயலில் எந்த விபரத்தையும் தவறவிடுவதில்லை. எலியா ஜெபம் செய்தபோது தேவன் பரிபூரணமாக வேண்டுதலைச் செய்து காட்டினார். பலியை மட்டும் அக்கினி பட்சிக்கவேண்டும். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக பலி, விறகு, கல், மண், தண்ணீர் ஆகிய அனைத்தையும் பட்சித்து பூரண நிலையைக் காட்டிவிட்டது. இந்தச் செயலைக் கண்ட மக்கள் ‘கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம்” என்று ஆர்ப்பரித்தார்கள். அக்கினியை அனுப்பி பலியைப் பட்சிக்கிற தேவனே பரிபூரணமுள்ள தேவன்.

நீங்கள் ஜெபம் பண்ணும்போது முழு விபரங்களையும் ஆண்டவர் நிறைவேற்றுவார் என்று நம்புங்கள். அவர் எதையும் கண்டுகொள்ளாமல் விடமாட்டார். உங்களுடைய ஆவிக்குரிய நல்வாழ்வுக்குத் தேவையானவைகளைத் தேவன் தந்தருளுவார். அவருடைய கவனத்திலிருந்து ஒரு அணுவும் தப்பமுடியாது. உங்களுடைய எந்தப் பிரச்சனையும் தேவனுக்குப் பெரிதல்ல. அவரால் அனைத்தையும் மாற்றிவிட முடியும். உங்கள் வாழ்க்கையின் முழுக் கட்டுப்பாட்டையும் அவரிடம் ஒப்படையுங்கள். உங்கள் விண்ணப்பங்களை அவரிடம் தெரிவித்துவிட்டு நுணுக்க விளக்கங்களை அவர் பொறுப்பில் விட்டுவிடுங்கள். அவரை விசுவாசிப்பீர்களா?

? இன்றைய சிந்தனைக்கு:

தேவனுக்கு எந்தப் பிரச்சனையும் பெரிதல்ல; எந்த விளக்கமும் மிகவும் அற்பமானதுமல்ல. அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்.

? இன்றைய விண்ணப்பம்

புத்தகசாலைக்காக ஜெபியுங்கள். எமது வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ப எமது வளங்களை ஒன்லைனிலும், (குறிப்பிட்ட மணித்தியாளங்களில்) புத்தகசாலையிலும் வழங்கும்போது, எமது சேவையில், உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, கவனத்துடன் இருக்க மன்றாடுங்கள்.

⏩ இன்றைய தியானத்தை எழுதியவர் – டாக்டர் வுட்ரோ குரோல்

? அனுதினமும் தேவனுடன்.

(இன்றைய தியானத்தை நீங்கள் http://sathiyavasanam.lk/dailyreading/ இணையத்தளத்தில் வாசிக்கலாம். நன்றி.)

எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: www.Sathiyavasanam.lk | Backtothebible.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Comments (156)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *