📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 24:17-21
இயேசுவைக் குறித்துப் பேசுகிறோம்
நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே. அவர் தேவனுக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார்.லூக் 24:19
தேவனுடைய செய்தி:
தேவனுடைய ராஜ்யத்தை தேடுங்கள். இராஜாவைக் கண்டடைவீர்கள்.
தியானம்:
பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் இயேசுவை மரண ஆக்கினைக்குட் படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள். அவரே நம்மை மீட்டு இரட்சிப்பவர். அவர் தேவனுக்கு முன்பாக செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள ஆண்டவராக இருக்கின்றார்.
விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:
இயேசு நம்மை மீட்டு இரட்சிக்க வல்லவர்.
பிரயோகப்படுத்தல் :
வசனம் 18ன்படி, எருசலேமிலே நடந்தவைகளை கூறிய சீடன் யார்? அவனது பெயர் என்ன? அவன் ஏன் துக்கமாக இருந்தான்?
வசனம்19ன்படி, “இஸ்ரவேல் மக்களை விடுவிப்பவர் இயேசு ஒருவரே என நாங்கள் நம்பிக் கொண்டிருந்தோம்” என்ற கூற்றில் புலப்படுவது என்ன?
பிறர் சோகமாக இருக்கும்போது, “நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று” நீங்கள் விசாரித்ததுண்டா?
இயேசுவைக் குறித்து இன்றுள்ள மக்கள் பேசிக்கொள்வது என்ன?
இயேசுவை நாம் தீர்க்கதரிசியாகவா, இரட்சகராகவா, ஆண்டவராகவா எவ்வாறு காண்கின்றோம்? எம்மைச் சுற்றியுள்ளவர்கள் அறிந்துவைத்திருப்பது என்ன?
வசனம் 21ன்படி, எத்தனை நாட்களுக்கு முந்திய சம்பவத்தை சீடர்கள் பேசிக்கொண்டார்கள்? எனக்கு இது உணர்த்துவது என்ன?
எனது சிந்தனை:
📘 அனுதினமும் தேவனுடன்
