செப்டெம்பர் 4 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 2நாளா 36:5-20 தானி 1:1-2

கர்த்தர் அனுமதிக்காவிட்டால்…

நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து, அதை முற்றிக்கை போட்டான். அப்பொழுது ஆண்டவர், ….அவன் கையில் ஒப்புக்கொடுத்தார். தானியேல் 1:1,2

கஷ்ட துன்பங்கள் வரும்போது எல்லாம் முடிந்துவிட்டது என்பதுபோல நாம் சோர்ந்து விடுகிறோம். ஆனால் தேவபிள்ளைகளுக்கு அது முடிவு அல்ல. அது தற்காலிகமானதும், நம்மை உருவாக்குகின்ற காரியங்களேயாகும். ஆனால் இந்தத் தற்காலிகமானவேதனையைத் தாங்கி மனந்திரும்பி தேவனிடம் வராவிட்டால், நிரந்தரமான சந்தோஷங்களை நாம் இழந்துவிடக்கூடும். இன்னொரு வகையில் சொன்னால், நிரந்தரமான சந்தோஷத்தைத் தமது பிள்ளைகள் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே தேவன் தற்காலிகமான சிறிய துன்பங்களை அனுமதிக்கிறார் என்றும் நாம் சொல்லலாம். அந்தத் துன்பத்திலும் நமக்கு ஒரு உற்சாகம் கிடைக்கும். காரியங்கள் தீமைபோலத் தெரிந்தாலும் முழுக் கட்டுப்பாடும் கர்த்தரிடமே இருக்கிறது என்பதை மறக்கக்கூடாது.

பாவம், நமக்கும் பிறருக்கும் வேதனை தருவது மாத்திரமல்ல, தேவனிடமிருந்து நம்மைப் பிரித்துப்போடுமளவிற்கு கொடூரமானது என்பதை நாம் சிந்திப்பதே யில்லை. தேவன் இரக்கமும் தயவும் உள்ளவர். அதேசமயம் அவர் பரிசுத்தமும் நீதியுமுள்ளவர். ஆகவேதான் தமது பிள்ளைகளைத் தம்மிடமிருந்து பிரித்து அழித்துப்போடும் பாவத்தை தேவன் ஆத்திரத்துடன் எதிர்த்து நிற்கிறார். தம்முடைய பிள்ளைகளின் இருதயத்தைத் தம்மிடம் திருப்பாவிட்டால் அவர்கள் பாவம் செய்து தமக்குத் தாமே கேடு விளைவிப்பது மாத்திரமல்ல, தம்மைவிட்டும் நிரந்தரமாகவே பிரிக்கப்பட்டுவிடுவார்கள் என்பது கர்த்தருக்குத் தெரியாதா? இதைக் கர்த்தரால் பொறுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் அவர் தமது பிள்ளைகளை நேசிக்கிறவர். இதனாலேயே பலவேளைகளிலும் அவரே இடைபட்டு பாவத்திற்கு இரையாகிக்கொண்டிருக்கும் தமது பிள்ளைகளை தண்டித்தாவது அவர்களை உணர்த்துகிறார். இதற்கு இஸ்ரவேல் நல்லதொரு உதாரணம்.

யோயாக்கீமை பாபிலோனிடம் ஒப்புவித்தது யார்? கர்த்தர். கர்த்தரே தமது ஜனத்தைஎதிராளியிடம் ஒப்புவித்தார். ஏன்? அவர்களை வெறுத்ததாலா? இல்லை. அவருடைய வழிகளை மனிதனால் அளவிடமுடியாது. சகலவற்றின் முடிவையும்கூட அறிந்தவர்தான் கர்த்தர். தமது பிள்ளைகள் தம்மிடம் திரும்பவும் சேரவேண்டும் என்பதில் வைராக்கியமுள்ளவர். கர்த்தர் நன்மையின் பிறப்பிடம். ஆகவே தீமை அவரது அனுமதியின்றி அவரது பிள்ளைகளை நெருங்கவே முடியாது. தீமைபோல நமக்கு தெரிகின்றவை களிலும் கர்த்தர் தமது நோக்கத்தையே வைத்திருக்கிறார் என்ற உண்மையை நாம் உணருவோமானால், எந்தத் தீங்கிலும், மரண ஆபத்திலும்கூட நாம் சோர்ந்துவிடமாட்டோம். அதுவே நம்மை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும்.

💫 இன்றைய சிந்தனைக்கு:   : நான் என் பிதாவின் கைகளில் இருக்கிறேன் என்ற சத்தியம், நான் பாவத்தை வெறுக்க எந்தளவுக்கு என்னில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

📘 அனுதினமும் தேவனுடன்.

6 thoughts on “செப்டெம்பர் 4 திங்கள்

  1. Sign up with promo code 1xBet and get a €/$130 bonus. Play sports betting, virtual sports and casino. valid throughout 2023. 1xBet is offering a $130 welcome bonus to new customers. To receive the bonus, players must register on the 1xBet website, deposit money into their account, and confirm their right to receive the bonus. The bonus is then automatically credited to the player’s account. Thanks to the bonus code, the player’s chances are instantly increased by 130%. 1xbet code promo bonusAdditional bonuses offered under the same conditions that apply to the main package bonus must be earned.

  2. Sign up with promo code 1xBet and get a €/$130 bonus. Play sports betting, virtual sports and casino. valid throughout 2023. 1xBet is offering a $130 welcome bonus to new customers. To receive the bonus, players must register on the 1xBet website, deposit money into their account, and confirm their right to receive the bonus. The bonus is then automatically credited to the player’s account. Thanks to the bonus code, the player’s chances are instantly increased by 130%. one x bet promo codeAdditional bonuses offered under the same conditions that apply to the main package bonus must be earned.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin