செப்டெம்பர் 18 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 43:1-5

இரகசிய கரம்

தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்… சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார். 1கொரிந்தியர் 10:13

இந்த வசனம் நம்மில் அநேகருக்கு மனப்பாடம். ஆனால் சோதனைகள் நெருக்கங்கள் வரும்போது, எவ்வளவுதூரம் இந்தச் சத்தியத்திற்கு நாம் சாட்சிகளாக ஜீவித்திருக்கிறோம்? கர்த்தர் எனக்கு அதிக நன்மைகள் செய்தார் என்று சாட்சி சொல்லாதவர்கள் இல்லை. ஆனால், காரியம் நன்மையாக முடிந்த பிற்பாடுதானே சொல்கிறோம். நெருக்கத்திலிருக்கும்போது நமது நடவடிக்கை எப்படிப்பட்டதாயிருக்கிறது என்பதுதான்நாம் தேவனுக்குக் கொடுக்கக்கூடிய மெய்யான சாட்சி.

அதைத்தான் தானியேலும் நண்பர்களும் செய்து காட்டியுள்ளார்கள். பாபிலோனிய,விக்கிரக ஆராதனைக்காரனாகிய பிரதானிகளின் தலைவனுடன் கர்த்தர் தரிசனத்திலோ வேறு எந்தவிதத்திலோ பேசவில்லை. ஆனால் அவன் தேவ சித்தத்தைச் செய்தான். எப்படி? எவருடைய கண்களுக்கும் தெரியாத ஒரு கரம் அவனை நடத்தியிருக்கிறது. அவன் மாத்திரமா, இந்த வாலிபருக்கென்று ஏற்படுத்தப்பட்ட விசாரிப்புக்காரன் மேல்ஷாரும் இந்த வாலிபர்மீது தயைக்காட்டி காரியத்தை நடப்பித்ததை நினைக்கும்போது நாம் கர்த்தரைக்குறித்து என்ன சொல்லுவோம்! “எந்த சூழ்நிலையிலும் நானே தப்புவிப்பேன்” என்று கர்த்தர் எத்தனை தடவைகள் நமக்கு உறுதி அளித்திருக்கிறார். அதை சங்கீதக்காரனும் அறிந்திருந்தார். அதனால்தான், “சத்துருவினால் ஒடுக்கப்படும்போது நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும்?” என்று பாடினார் (சங்.43:2). இந்த வாலிபருடைய உறுதியான ஸ்திரமான திடமான முடிவு, ஒரு பெரியதாக்கத்தையே ஏற்படுத்திவிட்டது அல்லவா! எந்த சூழ்நிலையிலும் நமது கால்களைதடுமாற்றம் இன்றி உறுதியோடு முன்னெடுத்து வைப்போமானால் கர்த்தர் நிச்சயமாக நமது காரியத்தில் இடைப்படுவார். அது உடனடிச் செயலாக இருக்கலாம், அல்லது சிலகாலமும் செல்லலாம்; ஆனால் முடிவு சரியாகத்தான் இருக்கும்.

நமது தனிப்பட்ட அல்லது குடும்ப விடயத்தில் கர்த்தருக்கென்று தைரியமாக முன்னே அடியெடுத்துவைக்க நாம் ஆயத்தமா? என்ன இழப்பு வந்தாலும் என் தேவனுடைய வாக்கை நான் நம்புவேன் என்று தைரியமாக சத்தமாகக் கூறி அறிவிக்க முடியுமா? எத்தனை தாய்மார்கள் இந்த விடயத்தில் பின்வாங்கியிருக்கிறார்கள். எத்தனை கிறிஸ்தவ சபைகள் பின்வாங்கியிருக்கின்றன. இருக்கட்டும், எந்தச் சோதனையிலும் கர்த்தருக்காக நிற்க நாம் ஆயத்தமா? அங்கேதான், கர்த்தருடைய இரகசியச் செயலை நம்மால் காணமுடியும், அனுபவிக்கமுடியும். “உன்னால் எதையும் காண முடியாதபோதும் என்னுடைய இரகசிய கரங்களை நீ நம்புவாயா” என்று கர்த்தர் கேட்கிறார். இதற்கு நமது பதில் என்ன?

💫 இன்றைய சிந்தனைக்கு:

 எதுவும் கண்களுக்குத் தெரியாதவிடத்தும், என் தேவனின் கரம் என்னைத் தாங்குகிறது என்பதை என்னால் விசுவாசிக்க முடியுமா?

📘 அனுதினமும் தேவனுடன்.

4 thoughts on “செப்டெம்பர் 18 திங்கள்

  1. 1xBet promo code free can guarantee you the maximum bonus 100%, all other 1xbet codes do not give you such bonuses. The number of promo codes issued is limited by the terms of the promotion. latest promo code for 1xbet After the expiration of the promotion, it is the turn to issue a new batch of codes, which are published on our website always up-to-date and working promo codes for 1xbet.

  2. 1xBet Promo Code 2023, it opens you a VIP sports bonus, which 100% corresponds to your first deposit of up to 130 €/$ (or the equivalent in the currency of your country). You can also use this bonus code when registering at 1xbet casino to receive a welcome bonus of 1950 €/$ and 150 free spins. 1xbet sports promo code Thanks to the bonuses, each new player can increase their chances of winning, play with bonus money.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin