📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 22:47-53

பாவ இருள் ஆட்சி புரியும் நேரம்

இயேசு அவனை நோக்கி: யூதாசே முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார். லூக்கா 22:48

தேவனுடைய செய்தி:

சத்துருக்களையும் இயேசு குணமாக்க வல்லவர். 

தியானம்:

இயேசுவைக் கைதுசெய்யும்படி, வந்த கூட்டத்திலிருந்து முன்பாக யூதாஸ் வந்தான். “மனுஷ குமாரனை வஞ்சிக்கும்பொருட்டு நட்பின் முத்தத்தைப் பயன்படுத்துகிறாயா?” என இயேசு அவனிடம் கேட்டார். சீமோன் பேதுரு,பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனின் வேலைக்காரனின் வலது காதை வெட்டினான். இயேசுவோ அவனது காதைத்தொட்டு, அவனைச் சுகமாக்கினார்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

தேவன் அருளுகின்ற சுகமானது, பரிபூரணமாக நம்மை சொஸ்தமாக்கும்.

பிரயோகப்படுத்தல் :

ஒரு கள்ளனைப் பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டுவந்தவர்கள் யார்? யார்?

இயேசுவை முத்தஞ்செய்யும்படி, வந்தவன் யார்? ஏன் அவன் அதைத் தெரிந்தெடுத்தான்?

“ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா” என்று அவசரப்பட்டவர்கள் யார்? அதில், மல்குஸ் என்பவனின் காதை வெட்டியவன் யார்? (யோவான் 18:10ஐ பார்க்க). அங்கு நான் இருந்தால் என்ன செய்திருப்பேன்?

வாளோடும் தடிகளோடும் நீங்கள் ஏன் வந்தீர்கள்? நான் குற்றவாளி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என இயேசு யாரிடம் கேட்டார்?

மற்றவர்களைத் தண்டிக்க வேண்டுமென்ற சிந்தையுடன் நான் யாரிடமாவது யூதாசைப்போல நடந்துகொண்டதுண்டா?

எனது சிந்தனை:

📘 அனுதினமும் தேவனுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin