📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 20:21-26
வரி செலுத்துதல்
இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். லூக்கா 20:25
தேவனுடைய செய்தி:
தேவனுடையவற்றை தேவனுக்குக் கொடுங்கள்.
தியானம்:
இயேசு எல்லா மக்களுக்கும் உண்மையானவற்றைப் போதித்தார். அவர் தேவனின் வழியைக் குறித்த உண்மையையே எப்போதும் கற்பித்தார். ஆகவே வஞ்சிப்பவர்கள் இயேசுவை ஏமாற்ற முடியவில்லை.
விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:
கிறிஸ்து இயேசு தேவனுடைய மார்க்கத்தை சத்தியமாய் போதித்தார்.
பிரயோகப்படுத்தல் :
பிற ஜனங்களுக்கு முன்பாகப் பேச்சிலே குற்றம்பிடிக்க முயற்சிப்பவர்களைக் கண்டதுண்டா? அவர்களின் கேள்விகள் எப்படிப்பட்டவை?
இயேசுவை சோதிக்க முற்படுகின்ற மனிதர்களைப்போலவா நானும் நடந்துகொள்கின்றேன்?
வசனம் 26ன்படி, இயேசு கூறிய பதிலைக் குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமாயிருந்தவர்கள் யார்? ஏன்?
ஞானம்மிக்க பதிலைக் கொடுக்கும்படி நாம் செய்யவேண்டியது என்ன?
நான் பிறரை எனது வார்த்தையினால் சங்கடத்துக்குட்படுத்துகின்றேனா? நான் யாருடைய உண்மையான சொற்களைப் பின்பற்றுகின்றேன்?
பிறரைக் குற்றவாளிகளாக காண்பிக்கும்படி பேசுகின்றவர்களைக் குறித்த எனது மனப்பான்மை எப்படிப்பட்டது?
தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய் நான் போதிக்க என்ன செய்ய வேண்டும்?
எனது சிந்தனை:
📘 அனுதினமும் தேவனுடன்.