ஆகஸ்ட் 20 சனி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 20:40-47

குமாரனா? ஆண்டவரா?

நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும் … லூக் 20:42

தேவனுடைய செய்தி:

கர்த்தர் அனைவருக்கும் ஆண்டவராக இருக்கின்றார்.

தியானம்:

தாவீது கிறிஸ்துவை ~ஆண்டவர்| என்கிறான் எப்படியெனில், கிறிஸ்துவே ஆண்டவர். அவரே தாவீதின் எஜமான். எனினும், கிறிஸ்து தாவீதின் குமாரனுமாவார். காரணம்,  மானிட வம்சத்தின்படி தாவீதின் வம்சத்தில் ஆண்டவராகிய கிறிஸ்து வந்து பிறந்தார். ஆகவே அவர் தாவீதின் குமாரன் எனவும் அழைக்கப்பட்டார்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

கிறிஸ்துவே எனது எஜமான், ஆண்டவர், இரட்சகர்.

பிரயோகப்படுத்தல் :

இன்று கிறிஸ்து தாவீதின் குமாரனா? அல்லது தாவீதின் ஆண்டவரா?

கிறிஸ்து இன்று யாருடைய வலதுபாரிசத்தில் அமர்ந்திருக்கிறார்?

பார்வைக்கு நீண்ட ஜெபம் பண்ணுகிறவர்களைக் கண்டதுண்டா?

தங்களை முக்கியமானவர்களாகக் காட்டுகிறவர்களைக் குறித்து நாம் ஏன் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்?

மக்களின் மதிப்பதை விரும்புகிறவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

வசனம் 47ன்படி, தேவன் யாரை மிகுதியாகத் தண்டிப்பார்? அதற்கான காரணம் என்ன?

இன்று நான், எனது வாழ்வில், சரிசெய்துகொள்ள வேண்டியது என்ன?

எனது சிந்தனை:

📘 அனுதினமும் தேவனுடன்.

9 thoughts on “ஆகஸ்ட் 20 சனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin