ஆகஸ்ட் 14 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 2சாமு 5:1-10

சமஸ்த இஸ்ரவேலின் இரண்டாம் ராஜா

அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள். 2சாமுவேல் 5:3

மூன்று தடவைகளாக அபிஷேகம் பெற்ற ஒரேயொருவர் தாவீது ராஜாதான். சவுல், ராஜாவாயிருந்தபோதே, அவனைப் புறந்தள்ளின கர்த்தர் சாமுவேலை அனுப்பி, தாவீதைஅபிஷேகம்பண்ணுவித்தார் (1சாமு.16:13). பின்பு, சவுல் மரித்தபின்பு, யூதாவின் மனுஷர், “தாவீதை யூதா வம்சத்தாரின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள்” (2சாமு.2:4). மூன்றாவதாக, இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் சேர்ந்து, “தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள். தாவீது ராஜாவாகும்போது, முப்பது வயதாயிருந்தான்; அவன் நாற்பது வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்” (2சாமு.5:3-5).

சமஸ்த இஸ்ரவேலின் இரண்டாவது ராஜா தாவீது. அதற்காக இவருடைய ராஜ வாழ்வு இலகுவாக இருக்கவில்லை. ஆடுகள் மேய்ப்பதற்கே தகுதியானவன் என்று குடும்பத்தார் மதித்தார்கள். அவர்கள் நடுவிலேயே அபிஷேகம்பண்ணப்பட்டும் அவர் ராஜ சிங்காசனத்தில் அமரவில்லை. சவுலின் எரிச்சலுக்கு ஆளாகி, உயிர் தப்ப ஓடினார்; இரண்டு தடவைகளாக சவுலைக் கொன்றுபோட தருணம் வாய்த்தும், தாவீது, சவுலைத் தப்பவிட்டார். பின்னர், யூதாவுக்கு ராஜாவாகியும் தாவீதுக்கு நிம்மதி இருக்கவில்லை. சமஸ்த இஸ்ரவேலின் ராஜாவாகிய பின்பும், ஏகப்பட்ட வேதனைகள்! சோதனைகள்! பத்சேபாள் விடயத்தில் பாவத்தில் அகப்பட்ட தாவீது, தான் ராஜா என்பதையும் மறந்து, தேவனுடைய பாதத்தில் விழுந்து “தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்” என்று கதறினாரே! மகன் அப்சலோமின் நிமித்தம் திரும்பவும் காடு மேடு என்று அலைய நேரிட்டது. அவனும் இறந்த பின்னர்தான் தாவீது வந்து அரியணையில் அமர்ந்தார். இவர்தான் இஸ்ரவேலின் ராஜா! அவர் தன் பாவத்தின் விளைவுகளைச் சந்திக்க நேரிட்டபோதும், தாவீது தனது ராஜரீகத்தைக் குறித்து பெருமை பாராட்டவேயில்லை, கர்த்தரையே சார்ந்திருந்தார்.

தாமே ராஜாவாகத் தெரிந்துகொண்ட தாவீதின் வாழ்வில், தேவன் இத்தனை பாடுகளை அனுமதித்தது என்ன? சவுல் தேவ வார்த்தையைப் புறக்கணித்தபோதே, கர்த்தர் தாவீதை அரியணையில் ஏற்றிவிடாதிருந்தது என்ன? ஆம், வரப்போகின்ற மேசியா, தாவீதின் சந்ததியிலேதான் வந்து பிறப்பார் என்பது தேவதிட்டம். அந்த ராஜாவாகிய மேசியா மாம்சத்திலிருந்த நாட்களில், “அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு” (எபி.5:7,8) என்று வாசிக்கிறோம். தாவீதின் வம்சத்தில் வரவிருந்த இயேசுவையே பிதாவானவர் இவ்வழியில் நடத்தும்போது அவன் எம்மாத்திரம்? நாம் எம்மாத்திரம்? எந்தவொரு உபத்திரவமோ சோதனையோ எதுவும் நமக்கு வீணுக்கல்ல. தேவன் தமது சித்தப்படி நம்மை உயர்த்தும்போது உயர்த்தட்டும்; நாமோ அவருடைய கரங்களில் தாவீதுபோல அடங்கியிருப்போமாக.

💫 இன்றைய சிந்தனைக்கு:  

பாடுகளோ துன்பங்களோ கர்த்தரின் கரத்தில் அடங்கி வாழ்கின்றேனா?

📘 அனுதினமும் தேவனுடன்.

5 thoughts on “ஆகஸ்ட் 14 திங்கள்

  1. 2023年FIBA世界盃籃球賽,也被稱為第19屆FIBA世界盃籃球賽,將成為籃球歷史上的一個重要里程碑。這場賽事是自2019年新制度實行後的第二次比賽,帶來了更多的期待和興奮。

    賽事的參賽隊伍涵蓋了全球多個地區,包括歐洲、美洲、亞洲、大洋洲和非洲。此次賽事將選出各區域的佼佼者,以及2024年夏季奧運會主辦國法國,共計8支隊伍將獲得在巴黎舉行的奧運賽事的參賽資格。這無疑為各國球隊提供了一個難得的機會,展現他們的實力和技術。

    在這場比賽中,我們將看到來自不同文化、背景和籃球傳統的球隊們匯聚一堂,用他們的熱情和努力,為世界籃球迷帶來精彩紛呈的比賽。球場上的每一個進球、每一次防守都將成為觀眾和球迷們津津樂道的話題。

    FIBA世界盃籃球賽不僅僅是一場籃球比賽,更是一個文化的交流平台。這些球隊代表著不同國家和地區的精神,他們的奮鬥和拼搏將成為啟發人心的故事,激勵著更多的年輕人追求夢想,追求卓越。 https://telegra.ph/觀看-2023-年國際籃聯世界杯-08-16

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin