ஆகஸ்ட் 12 சனி

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : பிலி 2:1-4

ஒற்றுமையும் கரிசனையும்

…மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். பிலிப்பியர் 2:3

தேவனுடைய செய்தி:

மனத்தாழ்மையோடு மற்றவரை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள்.

தியானம்:

அனைவரது மனமும் ஒன்று சேரவேண்டும், ஒருவருடன் ஒருவர் அன்புடன் இணைந்துகொள்ள வேண்டும். ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு, ஒரே நோக்கம் உடையவர்களாக, தன்னலமும், வீண் பெருமையும் கொள்ளாமல், பணிவுடன் இருங்கள்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

நீங்கள் உங்கள் வாழ்வில் மட்டும் அல்லாமல் மற்றவர் வாழ்விலும் ஆர்வம் கொள்ளுங்கள்.

பிரயோகப்படுத்தல் :

தேவனுடைய மக்கள் மத்தியில் பெருமையான சிந்தனை எந்த வடிவில் வெளிப்படுகின்றது? அதன் விளைவுகள் என்ன?

“அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.” என்பதன் அர்த்தம் என்ன? 

மற்றவர்களுக்குப் பிரயோஜனமான காரியங்களை செய்வது எப்படி?

தேவனுடைய தாராளமான அன்பு உங்களை தாழ்மையுள்ளவராயும், அன்புள்ளவராயும் மாற்றவேண்டுமென ஜெபிப்பீரா?

ஒற்றுமையும், தாழ்மையும், அன்பும், கரிசனையும் நமக்கேன் அவசியம்? கிறிஸ்தவனாக சரியாக சிந்திக்கப் பழகுவதற்கு இவை அவசியமானதா?

உங்களுக்குத் தருகிற மரியாதையைவிட மற்றவர்களுக்கு அதிக மரியாதை செலுத்துவது எப்படி? அதற்கு நான் ஆயத்தமா?

எனது சிந்தனை:

📘 அனுதினமும் தேவனுடன்.

3 thoughts on “ஆகஸ்ட் 12 சனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin