கிறிஸ்துமஸ் ஒரு நாள் அல்ல, அது ஒரு அற்புதம்!

• சகோ.இ.வஷ்னீ ஏனர்ஸ்ட் • இந்த உலகிற்கே ஆச்சரியமானதும், அற்புதமானதும், வல்லமை மிகுந்ததுமான ஒரு நிகழ்வை நினைவுபடுத்தவே நான் விரும்புகின்றேன். அது கிறிஸ்துமஸ் காலத்திற்குமட்டும் உரியதல்ல. எனினும், அது இயேசுகிறிஸ்துவின் பிறப்பைப் பற்றியதே. இன்று அநேக கிறிஸ்தவர்கள் கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் நாளுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். பரிசு வழங்க முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் நாள் முக்கியமானதல்ல. நடந்த அந்த சம்பவமே முக்கியமானது. கொடுக்கப்படுகின்ற பரிசு முக்கியமல்ல. கிறிஸ்துவே பரிசாக வந்தார் என்பதே முக்கியமானது. […]

யாரிடத்திலிருந்து உதவி வரும்?

சகோ.வஷ்னி ஏனர்ஸ்ட் “ஒரு வீதியில் நாம் நடந்து செல்லும் பொழுது, அல்லது ஒரு விபத்தில் அகப்பட நேரிடும்பொழுது, ஒரு பரீட்சைக்கு முகங்கொடுக்க நேரிடும்பொழுது, போக்குவரத்துப் பாதுகாப்பு அதிகாரிகளினால் சோதனைக்குள்ளாக்கப்படும் பொழுது, ஒரு தொழிலைத் தேடும்பொழுது, பொருளாதார விலைவாசி உயர்ந்துகொண்டே போகும்பொழுது, காரணமின்றி கைது செய்யப்படும்பொழுது, அல்லது நாம் கடத்தப்படும் பொழுது……“ இவ்வாறான சமயங்களில் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஆம், நாம் அத்தகைய நிமிடங்களில் செய்வதறியாது திகைத்து விடுகின்றோம். ஆயினும் எந்தவிதமான ஒரு பாதகமான சமயத்திலும்கூட நம்மைக் காப்பாற்றும், […]

உன்னில் தேவ மகிமை?

இ.வஷ்னி ஏனர்ஸ்ட்நன்றி : சத்தியவசனம் சஞ்சிகை. இலங்கை நான் ஆண்டவருக்காக ஊழியம் செய்ய விரும்புகிறேன், எனது வீட்டினை ஆண்டவருக்காக பயன்படுத்த விரும்புகிறேன், சபையில் பல நபர்களுக்கு முன்பாக, பாடல்கள் பாட விரும்புகிறேன், இசைக் கருவிகளை வாசிக்க விரும்புகிறேன், பிரசங்கம் பண்ண விரும்புகிறேன்… என தாலந்து பெற்ற பலர் எதையாகிலும் ஆண்டவருக்காக செய்ய வேண்டும் என வாஞ்சிப்பதுண்டு. அதில் எவ்வித தவறுமில்லைதான். ஆயினும், சாதிக்க வேண்டும், என்ற வாஞ்சையுள்ள நபர்களிடத்தில், ஆண்டவரின் மகிமை தன்னில் காணப்பட வேண்டுமென்ற சிந்தனையும் […]

தேவனின் சரித்திரத்திற்கு முடிவில்லை

சகோ.ஜெகராஜ் பெர்னாண்டோஇலங்கை நியாயாதிபதிகள் புத்தகத்தை ஆழமாக நோக்குகையில் மறைந்துள்ள பொக்கிஷங்களை நீங்கள் கண்டுபிடிக்க விரும்புகிறீர்களா? ஆம். அதை நாம் பின்னோக்கிப் பார்க்கையில் முன்னோக்கிச் செல்ல தேவ ஆவியானவர் உதவி செய்கின்றார் என்ற சத்தியத்தை இச்செய்தியின் வாயிலாக காண்போம். தேவனைக் குறித்தும், தேவனது மக்கள், தலைவர், சேவகர் என்போரைக் குறித்தும் வேதாகமத்தில் பார்க்கையில், நாம் தேவ பார்வையில் முன்னேறிச் செல்ல உதவும். நாம் இவ்வுலகத்தில் ஏன் இருக்கிறோம் என்ற நோக்கத்தை மறக்கும்போது, இங்கு வாழ்வதன் முக்கியத்துவத்தை நாம் இழந்துபோய்விடுவோம். […]

ஜெபியுங்கள்.

ஜுலை – ஆகஸ்ட் – செப்டெம்பர் சத்தியவசனம் சஞ்சிகை திருப்தியுடன் ஜெபியுங்கள். நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். (பிலிப்பியர் 4:11) ‘ஆண்டவரே, நான் எல்லா சூழ்நிலையிலும் திருப்தியாக இருப்பதற்காக நன்றி.” பயமில்லாமல் ஜெபியுங்கள். கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர்  என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்? (சங்கீதம் 27:1) ‘உம்மைத்தவிர, எதற்கும் நான் பயப்படவேண்டியதில்லை. நன்றி ஆண்டவரே.” இடைவிடாமல் ஜெபியுங்கள். இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள் (1தெசலோனிக்கேயர் […]

Solverwp- WordPress Theme and Plugin