30 ஏப்ரல், 2021 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: வெளி 3:14-22 ஜெயங்கொண்டவர்களாக! ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன். வெளி.3:21 ‘ஜெயங்கொள்ளுகிறவனெவனோ” இதுவே நமக்கிருக்கும் பெரிய சவால். ‘நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்தது போல” என இயேசு கூறுகிறார். ஒரு பந்தயத்தில் ஓடாமல், யுத்தத்தில் போராடாமல் எப்படி ஜெயம் கிடைக்கும்? கோவிட் 19 இலிருந்து தப்பித்துக்கொள்ள பல விதிமுறை களைப் பின்பற்றி வருகிறோம். ஒரு வீடியோவிலே

29 ஏப்ரல், 2021 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 119:33-40 தெளிந்த பார்வை மாயைகளைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும். சங்கீதம் 119:37 புதிதாகப் படைக்கப்பட்ட ஆதாம் ஏவாளுக்கு நேரிட்ட சோதனையில் நிகழ்ந்த முதல் விடயம், ஏவாளின் செவிகள் அந்நிய குரலுக்குச் செவிகொடுத்ததுதான்; கேட்டதால் பார்க்கவேண்டும் என்று இல்லையே, அவள் கண்கள் மாயையைப் பார்த்தது; பாவம் நுளைந்தது. இப்படியிருக்க, கிறிஸ்துவுக்குள் புதிய சிருஷ்டிகளாகச் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்ற நமது

28 ஏப்ரல், 2021 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2கொரிந்தியர் 5:16-21 புதிய சிருஷ்டி இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான். 2கொரிந்தியர் 5:17 கவனிப்பாரற்று, பழைமையடைந்து, அழுக்கடைந்த ஓவியங்களை ஏதேதோ இரசாயனப் பொருட்களைப் பாவித்து அதைச் சரிசெய்ய முற்படும் ஒருபெண்மணி, அவை மிகவும் பழுதடைந்ததாலும் வீசமாட்டார். கேட்டால், ‘மிகவும் பெறுமதிமிக்க இந்த ஓவியங்களை அழிந்துபோகவிடுவது அநியாயம். இவற்றைச் சீர்செய்து புதிதாக்குகின்ற ஒரு நிபுணரை எனக்குத் தெரியும். நான் இவைகளை அவரிடம் எடுத்துச் செல்வேன்.

27 ஏப்ரல், 2021 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: அப்போஸ்தலர் 20:17-28 தைரியம் உண்டா? பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் …பிரசங்கித்து, உபதேசம்பண்ணி… அப்போஸ்தலர் 20:20 எருசலேமிலே தனக்குக் கட்டுகளும் உபத்திரவங்களும் உண்டு என்பதைப் பரிசுத்த ஆவியானவரால் உணர்த்தப்பட்டு, தேவசித்தப்படி பவுல் எருசலேமுக்குப் புறப்பட்டுப் போகையில், எபேசு சபையின் மூப்பருக்குச் சொன்ன வார்த்தைகள் இன்று நம்மை சிந்திக்க வைக்கவேண்டும். ‘தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு

26 ஏப்ரல், 2021 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2கொரி 5:14-16 நெருக்கி ஏவும் அன்பு கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது 2கொரிந்தியர் 5:14 எங்கள் கணித ஆசிரியை, மிகவும் கண்டிப்புள்ளவரென்றாலும், நாங்கள் கணிதத்தில் நன்கு தேறவேண்டும் என்பதற்காக அவர் தன் நேரகாலத்தை அர்ப்பணித்து எடுத்த முயற்சிகளை இன்றும் மறக்கமுடியாது. சில நிரூபணங்களைச் சரியாக நிரூபித்து முடிப்பதற்காக படிப்படியாய் அவர் கற்றுக்கொடுத்த விதமே தனிதான். நமக்காக இல்லாவிட்டாலும் நமது ஆசிரியைக்காகவாவது, கணிதத்தில் மிகச்

25 ஏப்ரல், 2021 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: தெசலோனிக்கேயர் 1:1-10 எனக்கு யார் மாதிரி? இவ்விதமாய் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள். 1தெசலோனிக்கேயர் 1:7 ‘என் அப்பாதான் எனக்கு ரோல்மொடல்” என்றான் ஒரு மகன். உடைக்கும் அலங்காரத் துக்கும்கூட சிலர் சில உலகப் புகழ்பெற்றவர்களை மாதிரியாகக் கொண்டிருப்பார்கள். யாரையாவது மாதிரியாகக்கொண்டு வாழும்போது, நாளடைவில் அவர்கள் மாதிரியே நாமும் மாறிவிடக்கூடும். பிரியமானவர்களே! உங்களுக்கு மாதிரியாக யாரேனும் இருக்கிறார்களா? எதற்காக அவர்களை மாதிரியாகக் கொண்டிருக்கிறீர்கள்?

24 ஏப்ரல், 2021 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 5:27-32 இயேசுவைப் பின்பற்றிய லேவி பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் லூக்கா 5:32 தேவனுடைய செய்தி: நோயுற்றோருக்குத்தான் மருத்துவர் தேவை. மனிதர்களாகிய நம் அனைவருக்கும் மருத்துவராகிய இயேசு தேவை. தியானம்: ஆயக்காரனாகிய லேவியை இயேசு கண்டு: ‘என்னை பின்தொடர்ந்து வா” என்றவுடன் லேவி எல்லாவற்றையும் விட்டு, எழுந்து, அவருக்குப் பின்சென்றான். தன் வீட்டில் இயேசுவுக்காக பெரிய விருந்துபண்ணினான். விசுவாசிக்க வேண்டிய சத்தியம்: தேவன்

23 ஏப்ரல், 2021 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோவான் 14:15-21 என்னுள்ளே வாழும் தேவன் நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள். யோவான் 14:19 தன் வாழ்வையே தொலைத்துப்போட்ட நிலையில் தற்கொலைக்குத் தன்னைத் தயார் செய்த ஒருவன், இறுதியாகத் தன் பெற்றோரின் படத்தைப் பார்ப்பதற்காக ஒரு பெட்டியைத் திறந்தான். அதற்குள் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த வேதப்புத்தகம், ‘நான் இருக்கும்வரைக்கும் நீயும் இருப்பாய். எனக்குப் பின்னர் உனக்கு என்னவாகுமோ? எப்பொழுதாவது இந்த வேதத்தைக் கையில் எடுத்தால், உன்

22 ஏப்ரல், 2021 வியாழன்]

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 22:35-44 இயேசு பருகின பாத்திரம் பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும். …உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது… லூக்கா 22:41 ‘என் தவறினிமித்தம் எனது தகப்பனார் வீதியிலே அவமானப்பட்டதை, அவர் இறந்து இத்தனை வருடங்களாகியும் நினைத்தால் என் உள்ளம் உடைகிறது” என்று ஒருவர் கூறினார். இந்தத் தியான நேரத்திலே நமது பெற்றோர் அல்லது நமக்கு நெருக்கமான வர்கள் நமக்காக அவமானப்பட்ட

21 ஏப்ரல், 2021 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1பேதுரு1:15-21 மரணத்தை ஜெயித்தவர்! உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவன் மேலிருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார். 1பேதுரு 1:21 கொவிட் தனிமைப்படுத்தல் நாட்களில், ‘உலகில் என்னவும் நடக்கட்டும். நம் ஆண்டவர் மரணத்தையே வென்றவர். நம்மையும், தாம் தந்த பிள்ளைகளையும் எப்படி நடத்த வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். கடைசிக்கட்டம் என்றால் ஆண்டவர் மத்திய ஆகாயத்தில் வந்து எங்களைக் கொண்டுபோவார்” என உறுதிப்பட