? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எபேசியர் 5:1-4

வீண் பேச்சு வேண்டாம்

…ஸ்தோத்திரஞ் செய்தலே தகும். எபேசியர் 5:4

“சாப்பாட்டுப் போதகர்” என்று பாடசாலை நாட்களில் ஒரு போதகரைக்குறித்துக் கேலி பேசியதை இப்போது நினைக்க வெட்கமாக இருக்கிறது. அந்தப் போதகர் தன் பேச்சிலும் சரி, பிரசங்கத்திலும் சரி, உணவைப்பற்றிப் பேசாத நாளே கிடையாது. அதற்காக அப்படி நாம் பேசலாமா? இதனை இப்போது சிந்திக்கும்போது, நமது வாயின் வார்த்தைகள்தான் நம்மை உலகுக்குக் காட்டித்தரும் முதலாவது கண்ணாடி என்பதை உணருகிறேன்

நாம் நல்லவர்கள்போல வாழ்ந்தாலும், கட்டுப்பாட்டையும் மீறிப் புறப்படும் வார்த்தை நம்மைக் காட்டிக்கொடுத்துவிடும். அதிலும் பிறரைப்பற்றி குற்றமாகவோ (அது உண்மை யாகக்கூட இருக்கலாம்) அல்லது தகாதவிதத்திலோ நாம் பேசும்போது, ஒருபோதும் நாம் நம்மைக்குறித்துச் சிந்திப்பதில்லை. ஆனால், பேசிமுடித்த பின்பு, சற்று உட்கார்ந்தி ருந்து நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போமானால், அதே குற்றங்களை வாழ்வில் நாம் முன்னர் செய்திருக்கலாம்; அல்லது இப்போதும் செய்துகொண்டிருக்கலாம் என்பதைக் கண்டுகொள்ளலாம். நாம் எந்த வழியில் நடக்கிறோமோ, அல்லது நடந்தோமோ அந்த வழியில் நடப்பவனை அடையாளம் காண்பது நமக்கு இலகு. அதேசமயம், நாம் அதே தவறைச் செய்ததையும், அதனால் நாம் அடைந்த அவமானங்களையும், ஆண்டவர் கிருபையாய் நம்மை மன்னித்து தமது பிள்ளையாய் ஏற்று வழிநடத்தி வருவதையும் நினைத்துப் பார்த்தால் நிச்சயமாகவே நாம் அடுத்தவரை அடையாளம் கண்டாலும், குற்றப்படுத்தியோ கேலியாகவோ பேசவே மாட்டோம். அதையும் மீறி பேசுகிறோம் என்றால், அடுத்தவன் அல்ல, நாமேதான் மனந்திரும்பவேண்டியவர்கள். பேசுகின்ற வம்பு வார்த்தைகளும், வீண்நியாயங்களும், நியாயத்தீர்ப்புகளும் நமக்கே எதிராகத் திரும்ப அதிக நேரம் செல்லாது.

இவன் இன்னாருடைய பிள்ளை என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அப்படியே, இவன் கிறிஸ்துவின் பிள்ளை என்று சொல்லக்கூடிய அளவிற்கு நமது வாழ்வு இருக்கிறதா? நமது பாவங்களைப் பாராமல் இயேசு, நமக்காகத் தம்மையே வீணான வம்புப் பேச்சுக்கள் பேசி, நாம் அடுத்தவனைக் கொன்றுபோட மாட்டோம். நாம் பேசுகின்ற யாவையும் கர்த்தர் கவனித்துக் கேட்கிறார் (மல்கியா 3:16). அவர் மன்னித்து மறந்து விட்ட நமது சகல பாவங்களையும் நாம் பிறர்மீது சுமத்தி, நியாயந்தீர்ப்போமானால் அது தேவனைத் துக்கப்படுத்தும். அதைவிடுத்து, எல்லா நிலையிலும், நாம் தேவனை மகிமைப்படுத்தி, பிறரையும் உற்சாகப்படுத்தி, ஸ்தோத்திரங்களால் நமது நாவை நிரப்புவோமாக.

? இன்றைய சிந்தனைக்கு:  

கர்த்தர் எனக்கு அருளிய மன்னிப்பை மறந்து, யாரையாவது குற்றப்படுத்திப் பேசியிருந்தால், இப்போதே அதை சரிப்படுத்துவேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin