? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 6:1-5

ஓய்வு நாளும் இயேசுவும்

மேலும் மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார். லூக்கா 6:5

தேவனுடைய செய்தி:

ஓய்வு நாளுக்கும் மனித குமாரன் ஆண்டவராக இருக்கிறார்.

தியானம்:

ஒரு ஓய்வு நாளில் இயேசு தமது சீஷர்களுடன் தானியங்கள் விளைந்திருந்த நிலத்தின் வழியாக நடந்து சென்றபோது, சில சீஷர்கள் தானியத்தைக் கொய்து, அதைச் சாப்பிட்டார்கள். அதைக்குறித்து சில பரிசேயர்கள், இயேசுவிடம் கேள்வி எழுப்பினார்கள்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

தேவன் மனிதனுக்காகவே ஓய்வுநாளைப் படைத்தார்.

பிரயோகப்படுத்தல் :

ஓய்வு நாளன்று நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? தாவீதும் அவனது மக்களும் பசியுடன் இருந்தபோது, தேவனுக்குப் படைக்கப்பட்ட தேவனின் அப்பத்தை எடுத்து, அதைச் சாப்பிட்டதைக் குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?

‘ஆசாரியர்கள் மட்டுமே அந்த அப்பத்தைப் புசிக்க முடியும்’ என்று சட்டம் கூறுவதைக் குறித்து பரிசேயரிடம் இயேசு ஏன் கூறுகின்றார்?

மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றால், இயேசு எப்படிப்பட்டவர்? அவரது வல்லமை என்ன? மனிதரிடம் அவர் எதிர்பார்ப்பது என்ன?

ஓய்வுநாளைக் குறித்த எனது மனப்பான்மை என்ன? அதை நான் எப்படி கைக்கொள்ளுகின்றேன்?

? இன்றைய எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin