குறிப்பு-

வாசகர்களாகிய உங்களுடைய தியானத்திற்கென்று பிரதி சனிக்கிழமையை நாம் தெரிந்துள்ளோம். உங்கள் தியானத்திற்கு உதவியாக 1சாமுவேல் 26 ஐ வாசித்துத் தியானித்து, உங்கள் சிந்தனைகளை குறித்துக் கொள்ளுங்கள். நீங்களும் தியானிப்பதற்கான முயற்சிகளில் பயிற்சியெடுங்கள். பயன்பெறுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள்.

? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1சாமுவேல்  26:20-25

?  மன்னிக்கும் மனப்பான்மை

…அவர் என்னை எல்லா உபத்திரவத்திற்கும் நீங்கலாக்கி விடுவாராக என்றான். 1சாமுவேல் 26:24

? தியான பின்னணி:

தாவீதின் வார்த்தைகளைக் கேட்ட பின்பு, சவுல் தாவீதை மறுபடியும் திரும்பி வரும்படி அழைக்கிறான். நான் மதியற்றவனாய் மகா பெரிய தப்பிதஞ் செய்தேன் என கூறினாலும், தாவீது ஜாக்கிரதையாக செயல்படுவதையும், சவுலின் மேலோட்டமான வார்த்தை ஜாலங்களில் மயங்கிவிடாமல், தேவனில் தங்கியிருப்பதையும் வெளிப்படுத்துகிறான்.

? பிரயோகப்படுத்தல் :

❓ உங்களுக்கு எதிராக தீங்கிழைத்தும், உங்களுடன் கதைக்கையில், உங்களிடம் மன்னிப்பு கேட்காத சகோதரன், சகோதாpயைக் குறித்து எவ்வாறு நோக்குவீர்கள்?

❓ சிலர் தமது தவறுக்கு தாமே காரணம் எனக் கூறிக்கொண்டாலும், உண்மையில், மனம் மாறாதவர்களைக் கண்டிருக்கின்றீர்களா?

❓ யாரிடமாவது மனம்விட்டு மன்னிப்பு கேட்காமல், மறைக்கும் குணம் உங்களிடமுண்டா, மறக்க முடியாத விடயங்கள் உமது வாழ்வில் உண்டா? ‘ஆம்’ என்றால், நிவர்த்தி செய்ய முயற்சி எடுப்பீர்களா?

❓ ‘நீ பெரிய காரியங்களைச் செய்வாய்; மேன்மேலும் பலப்படுவாய்” என எம்மை எதிர்ப்பவர்கள் கூறத்தக்க நாளைக் காண நான் வாஞ்சிப்பேனா?

? தேவனுடைய செய்தி:

▪️ மனந்திரும்பாத மன்னிப்பு, உறவுகளில் மாற்றத்தையும் ஆரோக்கியமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

? விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

மனிதருக்கு அல்ல, தேவனுக்கே நாம் பயப்படவேண்டும், கீழ்ப்படியவேண்டும்.     

? எனது சிந்தனை குறிப்பு :

__________________________________________________________________________________________________________________________________________________________________________

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Solverwp- WordPress Theme and Plugin