? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 7:36-50

மன்னிப்பும் அன்பும்

…இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது. இவள் மிகவும் அன்பு கூர்ந்தாளே… லூக்கா 7:47

தேவனுடைய செய்தி:

உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியானவர் இயேசு கிறிஸ்துவே. யோவா-1:29

தியானம்:

பரிசேயருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார் இயேசு. அந்நகரில் ஒரு பாவியான பெண், இயேசுவிடம் வந்து, அவர் காலடிகளைத் தன் கண்ணீரால் நனைத்து, தன் கூந்தலால் துடைத்து, முத்தமிட்டு, நறுமணத் தைலத்தை பூசினாள். அவள் ஒரு பாவியான பெண் என்று சிந்தித்த சீமோனிடம், யாருக்கு அதிகம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதோ அவரே அதிக அன்பு செலுத்துவார் என்ற சத்தியத்தை இயேசு உணர்த்தி, அந்தப் பெண்ணின் பாவங்களை மன்னித்து, சமாதானத்தோடே செல் என்று கூறினார்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

என் பாவங்கள் மன்னிக்கப்பட்டது.

பிரயோகப்படுத்தல் :

இயேசு பரிசேயனுடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார். விருந்துக்கு இன்று நாம் அழைக்கப்பட்டால், அல்லது நாம் யாரையாகிலும் அழைத்தால் என்ன செய்வீர்கள்? எதைக்குறித்து பேசுகின்றீர்கள்? எப்படி கவனிப்பீர்கள்? அதிக கடன்பட்டவனையும், குறைந்த கடன்பட்டவனையும் எஜமான் மன்னித்து அந்தக் கடன்களை தள்ளுபடி செய்துவிட்டால், எவன் எஜமானிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? உமது பதில் என்ன? ஏன்? பாவங்களையும் மன்னிக்கும் இயேசு யார்? அவரை தனிப்பட்ட விதத்தில் அறிவீர்களா? தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்று அறிந்த ஆண்டவர், அவளது பாவத்தை மன்னித்தாரானால் நான் செய்யவேண்டியது என்ன? உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என இயேசு அந்தப் பெண்ணிடம் கூறியது ஏன்?

? இன்றைய எனது  சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin