? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 1:1-25 

நம்பகத்தன்மையும் நிச்சயமும் 

?  …ஒழுங்காய் உமக்கு எழுதுவது  எனக்கு நலமாய்த் தோன்றிற்று. லூக்கா 1:4 

✝️ தேவனுடைய செய்தி:

தேவனுடைய வழிகளில் மக்களை திருப்புகின்றவர்களாக நாம் திகழவேண்டும்.

? தியானம்:

வைத்தியரான லூக்கா, ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித் தறிந்து, ஒழுங்கான கிரமமாக, மனிதனாக வந்த இறைவனாகிய இயேசுவை குறித்து தேயோப்பிலுவுக்கு எழுதுகிறார். ஆசாரியப்பணி செய்துவந்த சகரியா முன்பாக, தேவதூதன் தரிசனமானபோது அவர் கலக்கமடைந்தார். பயந்தார். பிறக்கப்போகின்ற மகனுக்கு யோவான் என பெயரிடும்படி தேவதூதன் கூறினார்.

✝️ விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

தேவ வார்த்தையில் உள்ள ஒழுங்கு, நேர்த்தி, தெளிவு, நிச்சயம் எனது வாழ்விலும் காணப்பட வேண்டும். தேவ வசனத்தை நாம் மற்றவர்களிடம் கடத்தவேண்டும்.

✝️ பிரயோகப்படுத்தல் :

‘தேவ வார்த்தைகளை” ஒழுங்கான முறையில் மற்றவர்களோடு நான் பகிர்ந்து கொள்கின்றேனா? அன்று, யாருக்குக் குறிப்பிட்டு எழுதினார்? அப்படியானால் நமக்கு அது ஏன், எப்படி பொருத்தமானதாக அமைந்துள்ளது?

லூக்காவைக்குறித்து என்ன நினைக்கின்றீர்கள்? 2ம் வசனத்தின்படி, லூக்கா எப்படிப்பட்டவர்களிடத்திலிருந்து தகவல்களைப் பெற்றுக்கொண்டார்? இன்று  நான் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்து அறிந்துகொள்கிறேனா?

தேவனுக்காக பணிசெய்தாலும், தேவ சத்தத்தை, சித்தத்தை உணராமல் இருக்கலாமா? மக்களை ஆசீர்வதிக்க வேண்டியவன் ஊமையாகி, சைகையினால் பேசுவதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

வசனம் 16,17ன்படி யோவான் ஸ்நானகனின் மிகப் பெரிய பணிகள் என்ன? 

தேவனுடைய வார்த்தையின் பிரகாரம் வாழ்ந்தாலும்கூட, சில இக்கட்டான காலகட்டங்களில் தேவன் மீதுள்ள எமது விசுவாசம் தடுமாறியதுண்டா?

 எலிசபெத் கருதரித்தபோது அவள் கூறியது என்ன?

? எனது சிந்தனை:? எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam)
,
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *