? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  லூக்கா 4:14-21

தேவன் அவரை அனுப்பினார்.

ஜெப ஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லாராலும் புகழப்பட்டார். லூக்கா 4:15

தேவனுடைய செய்தி:

கர்த்தருடைய ஆவியானவர் இயேசுவோடு இருந்தார்.

தியானம்:

நற்செய்தியைப் போதிப்பதற்கும், சிறைப்பட்ட கைதிகளை விடுதலையாக்கவும், குருடர்கள் பார்வை பெறவும், மக்களின் துன்பத்தினின்று பலவீனர்களை விடுதலையாக்கவும், இரக்கம் காட்டும் காலத்தை அறிவிக்கும்படியாகவும் தேவன் இயேசு கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அனுப்பினார்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

தேவன் அருளிய வார்த்தைகளை நாம் தினமும் வாசிக்க விசுவாசிக்க வேண்டும்.

பிரயோகப்படுத்தல் :

பரிசுத்த ஆவியானவரின் வல்லமையோடு இயேசு கலிலேயாவுக்குத் திரும்பி சென்று தமது பணியை ஆற்றினார். இன்று நான் அவரது வல்லமையினால் நிறைந்து வாழ்கின்றேனா? பணியாற்றுகின்றேனா?

தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்தில் இயேசு காட்டிய முன்மாதிரி எப்படிப்பட்டது? எமது ஊரில், நாம் வாழும் பிரதேசத்தில் எமது நற்பெயர் என்னவாக இருக்கின்றது?

இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று (4:21) என இயேசு கூறியதன் அர்த்தம் என்ன?

‘வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார்.” இதிலிருந்து கற்றுக்கொள்வது என்ன?

தேவ ஆவியானவர் எனக்கூடாகச் செயற்பட நான் செய்யவேண்டியது என்ன?

? இன்றைய எனது சிந்தனை:



? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin