? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 3:15-20

தூற்றுக்கூடை

அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார். பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார்… லூக்கா 3:17

தேவனுடைய செய்தி:

சத்தியத்திற்காக வாழும்போது, உபத்திரவமும் நண்பனாக மாறும்.

தியானம்:

யோவான் ஸ்நானகனைக் குறித்து மக்கள் பலவிதமாக இருதயத்தில் சிந்தித்து பேசிக்கொண்டிருக்கையில், தேவன் அழைத்த பணியின் அடிப்படையில் அவர் வாழ்ந்தார்.

நான் விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

நான் செய்யும் ஒவ்வொரு பணியிலும், செயலிலும், எனக்குரிய பாராட்டை, புகழை நாடுகிறேனா அல்லது தேவ மகிமைக்காக ஏங்கும் இருதயம் எனக்குண்டா?

பிரயோகப்படுத்தல்:

மக்கள் தன்னை ‘இரட்சகராக” யோசிக்கையில், வசனம் 16ல் யோவானின் குணாதிசயம் எப்படிப்பட்டதாக இருந்தது?

யோவானின் பிரசங்கங்கள், ‘யாரை” மையப்படுத்தியுள்ளது? எவ்வாறு அவரை யோவான் சித்தரிக்கிறார்?

அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார்” என்பதிலிருந்து நீர் அறிவது என்ன? கிறிஸ்து யாருக்காவது நீரினால் ஞானஸ்நானம் கொடுத்தாரா?

யோவான் ஸ்நானகன் செய்த அற்புதங்கள் எவை? அவர் படுகொலை செய்யப்பட்டதன் காரணம் என்ன? அவர் சிறையில் அடைக்கப்பட்டதற்கான காரணம் என்ன?

மற்றவர்களின் பாவங்களைச் சுட்டிக்காட்டும்போது எமது நோக்கம் எதுவாக இருக்க வேண்டும்?

இன்றைய தீர்க்கதரிசிகளின் பிரசங்கங்களுக்கும், யோவான் ஸ்நானகனின் பிரசங்கங்களுக்கும் வித்தியாசம் உண்டா? அப்படியானால் எவை? ஏன்?

? இன்றைய எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin